Tirupur News » Kangeyam

மின்கட்டண உயர்வு அறிவிப்பு இன்று வெளியாகிறது : நாளை முதல் தமிழகத்தில் புதிய கட்டணம் அமல்?
தமிழகத்தில் மின்கட்டண உயர்வு தொடர்பாக, மின்சார வாரியம் விண்ணப்பித்துள்ள மனு மீதான கருத்துக் கேட்பை தொடர்ந்து, புதிய மின் கட்டண ஆணையை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இன்று வெளியிடுகிறது. புதிய மின் கட்டண ஆணையில், கட்டண உயர்வு தொடர்பான விவரங்கள் அறிவிக்கப்படவுள்ளன. இந்த கட்டண உயர்வு, நாளை (1ம் தேதி) முதல் அமலுக்கு வரும் எனக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் தற்போது மின் இணைப்பு பெற்றுள்ள இரண்டு கோடியே ஐந்து லட்சத்து 16 ஆயிரம் மின் இணைப்புகள் உள்ளன. இதில், ஒரு கோடியே 38 லட்சம் பேர், வீடுகளுக்கு இணைப்பு பெற்றுள்ளனர். தமிழகத்தில் கடந்த 2003 மார்ச் மாதம் 15ம் தேதி மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன் பிறகு மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து அரசு பலமுறை பரிசீலனை செய்தாலும், இது ஓட்டுக்கு வேட்டு வைக்கும் விவகாரம் என்பதால் அதை தள்ளிப் போட்டு வந்தது. நாடு முழுவதும் மின்தட்டுப் பாடு அதிகரித்துள்ள நிலையில், பற்றாக்குறையை சரிசெய்ய, அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க வேண்டிய நிலைக்கு மின் வாரியம் தள்ளப் பட்டது. இதனால், மின்கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியம் அதிகமானது.

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 18ம் தேதியன்று, மின்கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான மனுவை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், மின்வாரியம் விண்ணப்பித்தது. இதில், உயர் அழுத்த தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு ரூ. 3.50லிருந்து நான்கு ரூபாயாக உயர்த்த அனுமதி கோரப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களுக்கான உயர் மின் அழுத்த இணைப்பு பெற்றவர்களுக்கு, ரூ.3.50லிருந்து, ரூ.4.20 ஆகவும், உயர் அழுத்த இணைப்பு பெற்றுள்ள வணிக நிறுவனங்களுக்கு, ஐந்து ரூபாயில் இருந்து, ரூ. 5.80 ஆக உயர்த்த மனு செய்யப்பட்டுள்ளது.

வீட்டு இணைப்புகளைப் பொறுத்தவரை, இரு மாதங்களுக்கு 201 யூனிட் முதல் 400 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ. 3.50லிருந்து 4 ரூபாயாகவும், 401 முதல் 600 யூனிட் வரை உபயோகிப்போருக்கு, யூனிட் ஒன்றுக்கு ரூ. 3.50லிருந்து 4.25 ஆகவும், 600 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு ரூ. 4.75லிருந்து, 5.75 ஆகவும் உயர்த்த அனுமதி கோரியுள்ளது. இது தவிர தாழ்வழுத்த மின் இணைப்பு பெற்றுள்ள கல்லூரி, சினிமா தியேட்டர்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பலவகையான இனங்களுக்கு மின்கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதிக்குமாறு மின்வாரியம் மனுவில் கோரியிருந்தது. இந்த விண்ணப்பத்தை ஆய்வு செய்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம், பொதுமக்கள் கருத்துக் கேட்பு நிகழ்ச்சியை நடத்தியது. சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட இடங் களில் நடந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில், தொழில் அமைப்புகளும், பொதுமக்களும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.

இந்நிலையில், புதிய மின்கட்டண ஆணையை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இன்று வெளியிடுகிறது. மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் கபிலன் மற்றும் உறுப்பினர்கள் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து மின்கட்டண உயர்வு குறித்து அறிவிக்கவுள்ளனர். கட்டண உயர்வு, நாளை முதல் அமலுக்கு வரும் என்று தெரிகிறது. வீடுகள், தொழிற்சாலைகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்தும் மின்வாரியத்தின் அறிவிப்பு தொடர்பாக, ஒழுங்குமுறை ஆணையத்தின் முன் ஆஜரான பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களின் கருத்துகளை பரிசீலித்துள்ள ஆணையம், அதற்கேற்ப, மின்வாரியத்தின் வேண்டுகோளில் சிலமாற்றங்களைச் செய்து, இன்று அறிவிக்கவுள்ளது. வீடுகளுக்கான மின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், வீட்டு இணைப்பு மற்றும் தொழிற்சாலைகளுக்கான இணைப்பு பெற்றுள்ள பெரும்பாலானவர்களுக்கு கட்டண உயர்வு பொருந்தும் எனக் கூறப்படுகிறது.

நன்றி தினமலர்

நொய்யலாற்று பாலம் சீரமைப்பு ரூ.2.57 கோடியில் பணிகள் தீவிரம்
Vellakovil : ஈரோடு-காங்கயம் ரோட்டில் அமைந்துள்ள நொய்யல் பாலம் சீரமைப்பு பணி, ரூ. 2.57 கோடியில் நடக்கிறது. கட்டமைப்பு பணிகள் நடந்து வருவதால், துணைப்பாலம் கட்டப்பட்டு போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது.

ஈரோட்டில் இருந்து அறச்சலூர் வழியாக காங்கயம் செல்லும் மெயின் ரோட்டில், நத்தக் காடையூர் அருகே நொய்யல் பாலம் செல்கிறது. ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் எல்லையை நிர்ணயிக்கும் விதமாக அமைந்துள்ள இந்த பாலம் மிகவும் குறுகலாக உள்ளது. பாலம் அமைந்துள்ள இடத்தில் இருந்து காங்கயம் 17 கி.மீ., தொலைவிலும், தாராபுரம் 49 கி.மீ., தொலைவிலும் அமைந்துள்ளது. மேற்கு மற்றும் தென்மாவட்டங்களை இணைக்கும் முக்கிய வழித்தடத்தில் அமைந்துள்ள இந்த பாலம், மிகவும் பழுதடைந்து காணப்பட்டது.

குறுகலான இப்பாலத்தில் பயணிக்கும் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள், எதிரெதிரே செல்ல முடியாமல் அவதிப்பட்டன. தற்போது, முக்கிய வழித்தடமாக உள்ள இப்பாலம் நெடுஞ்சாலைத்துறையின் நபார்டு மற்றும் கிராம சாலைகள் மேம்படுத்தும் திட்டத்தில், 2.57 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. 5.5 மீட்டர் அகலமுள்ள இப்பாலம், 10.5 மீட்டராக அகலப்படுத்தப்படுகிறது. பாலத்தின் சிதிலமடைந்த கைப்பிடிச் சுவர்கள் இடிக்கப்பட்டு புதிதாக அமைக்கப்படுகிறது.

பாலம் பணி நடப்பதையடுத்து, அதன் அருகிலேயே தற்காலிக துணைப்பாலம் அமைக் கப்பட்டு, வாகன போக்குவரத்துக்கு வழி செய்யப் பட்டுள்ளது. இதனால், காங்கயம்-ஈரோடு செல்லும் வாகனங்கள் தற்காலிக பாலத்தின் வழியே பயணிக்கின்றன.

நன்றி தினமலர்

வியாபாரிக்கு அரிவாள் வெட்டு வெள்ளகோவிலில் பரபரப்பு
Vellakovil : ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்த மர்ம நபர்கள், பட்டப்பகலில் பப்ஸ் வியாபாரியின் கையை வெட்டியது, வெள்ளகோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளகோவில், காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர் அப்துல்குத்தூஸ் (42); இவருக்கு நான்கு மனைவியர். தினமும் பப்ஸ் எடுத்துக் கொண்டு கடை கடையாய் சென்று வியாபாரம் செய்வார்.

சம்பவத்தன்று, மூலனூரை அடுத்த செம்மண்டம்பாளையம் பிரிவில் பப்ஸ் விற்பனை செய்து கொண்டிருந்தார். இரண்டு பைக்கில் ஹெல்மெட் அணிந்து நான்கு பேர் வந்தனர். அவர்கள், அப்துல்குத்தீஸ் வலது கையை மணிக்கட்டுடன் அரிவாளால் வெட்டினர்.

நிலைகுலைந்த அவர், அந்த இடத்திலேயே மயக்கமடைந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு, திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த வெள்ளகோவில் போலீசார், அப்பகுதி மசூதி மற்றும் அப்துல்குத்தூஸ் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அளித்துள்ளனர்.

விடுபட்ட பயனாளிகளுக்கு இலவச காஸ் அடுப்பு வழங்கல்
Vellakovil: வெள்ளகோவில் நகராட்சி பகுதியில், விடுபட்ட பயனாளிகளுக்கு இலவச காஸ் இணைப்புடன் கூடிய அடுப்புகளை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.வெள்ளகோவில் நகராட்சியில் விடுபட்ட 439 குடும்பங்களுக்கு ஒன்பது லட்சத்து 89 ஆயிரத்து 506 ரூபாய் செலவில், இலவச காஸ் அடுப்பு வழங்கப் பட்டது.

பயனாளிகளுக்கு இலவச அடுப்பு வழங்கி, அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது:தமிழக அரசு ஒரு கிலோ நெல் 10.50 ரூபாய்க்கு கொள்முதல் செய்து, ஒரு கிலோ அரிசியை ஒரு ரூபாய்க்கு வழங்கி வருகிறது. இதுவரை இத் திட்டத்துக்கு ஆயிரத்து 800 கோடி ரூபாய் மானியத்தை அரசு வழங்கியுள்ளது. எதிர்க்கட்சிகள் குறைகூற முடியாதவாறு ஒவ்வொரு திட்டமும் செயல்படுத் தப்பட்டு வருகிறது, என்றார்.

ஒன்றிய செயலாளர் பாலசுப்ரமணியம், வேளாண் விற்பனைக்குழு உறுப்பினர் கனகசபாபதி பேசினர். நகர செயலாளர் மோகனசெல்வம், நகராட்சி துணை தலைவர் விஜயலட்சுமி, ஒன்றிய துணை செயலாளர் சேகர், நகர துணை செயலாளர் குமரவேல், இளைஞரணி அமைப்பாளர் முத்துக்குமார், புதுப்பை ஊராட்சி தலைவர் பாலசுப்ரமணியம் உட்பட பலர் பேசினர்.

நன்றி தினமலர்

கண் சிகிச்சை முகாம்
Vellakovil:கோவை அரவிந்த் கண் மருத்துவமனை, வெள்ளகோவில் கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தின.முன்னாள் அமைச்சர் துரை ராமசாமி துவக்கி வைத்தார். தாளாளர் சக்திவடிவேல், செயலாளர் கருணாகரன் முன்னிலை வகித்தனர்.

முகாமில், 1,026 பேருக்கு சர்க்கரை நோய், கண் நீர் அழுத்த நோய் குறித்த பரிசோதனை செய்யப்பட்டது.கண்புரையுள்ள 160 பேர் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு, கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக் கப்பட்டனர்.

அறுவை சிகிச்சை, பரிசோதனை, மருந்து, தங்குமிடம், உணவு முதலியன இலவசமாக வழங்கப் பட்டன. கோவை அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர்கள் மங்களாதேவி, பானுபிரகாஷ், வைபவ் ஆகியோர் தலைமையில் 30 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் கண் பரிசோதனை செய்தனர்.

நன்றி தினமலர்

பெட்ரோல் விலை லிட்டருக்குரூ 3.50 உயர்வு : கெரசின், காஸ், டீசல் விலையும் அதிகரிப்பு
சர்வதேச சந்தைகளில் நிலவும் ஏற்ற இறக்கங்களுக்கு தகுந்தமாதிரி இனி பெட்ரோலின் விலை இந்தியாவிலும் இருக்கும் என, மத்திய அரசு நேற்று முறைப்படி அறிவித்தது.

அதன்படி பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.3.50 வரை தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.2 வரையிலும், ஏழை மக்கள் பயன்படுத்தும் மண்ணெண்ணெய் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 3 வரையிலும், நடுத்தர மக்கள் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.35 வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளன. மத்திய அரசின் முக்கிய கூட்டணிக் கட்சியான தி.மு.க.,வின் முழுஒத்துழைப்போடு இந்த விலையேற்றம் முடிவு செய்யப்பட்டுள்ளது .

பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலைகள் உயர்த்தப்படுவது குறித்து கடந்த சில வாரங்களாகவே மத்திய அரசு ஆலோசித்து வந்தது. இதுகுறித்து கிரீத்பரீக் கமிட்டி அமைக்கப்பட்டு, விலையேற்றம் குறித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்த பரிந்துரைகள் குறித்து முடிவெடுக்க அமைச்சரவை கூட்டம் பலமுறை கூடியபோது, முடிவு எடுக்க முடியவில்லை. பல அமைச்சர்களும் கலந்து கொள்ளவில்லை. இதனால், முடிவு தள்ளிப்போனது.இந்நிலையில் நேற்று, டில்லியில் உள்ள சவுத் பிளாக் அலுவலகத்தில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் உயர்மட்ட அமைச்சர்கள் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், திரிணமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா கலந்து கொள்ளவில்லை. ஆனால், தி.மு.க., சார்பில் அமைச்சர் அழகிரி பங்கேற்றார். கூட்டம் முடிந்ததும் நிருபர்களிடம் பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா மற்றும் பெட்ரோலியத்துறை செயலர் சுந்தரேசன் ஆகியோர் பேசினர். அப்போது விலையேற்றம் குறித்த விவரங்களை தெரிவித்தனர்.பெட்ரோலின் விலை இனிமேல், சர்வதேச சந்தைகளின் ஏற்ற இறக்கங்களுக்கு தகுந்தமாதிரி இந்தியாவிலும் இருக்கும். பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.3.50 வரை உயர்த்தப்படவுள்ளது.

பெட்ரோல் பயன்படுத்துவோர் இந்த விலையேற்றத்தை தாங்கும் சக்தி உள்ளவர்கள் என்பதாலும், எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டியிருப்பதாலும் இந்த விலையேற்றம் தவிர்க்க முடியாதது.சரக்கு போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் டீசலின் விலை, லிட்டர் ஒன்றுக்கு ரூ.2 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலையேற்றத்திற்கு பிறகும் ரூ.23 ஆயிரம் கோடி வரை அரசாங்கத்திற்கு மானியச் செலவு வரும்.

ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் மண்ணெண்ணெய் லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 வரை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2002ம் ஆண்டுக்கு பிறகு மண்ணெண்ணெயின் விலை தற்போது தான் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதுமட்டுமல்லாது ஒரு லிட்டர் மண்ணெண்ணெயின் விலை பாகிஸ்தானில் ரூ.36ம்,வங்கதேசத்தில் ரூ.30, நேபாளத்தில் ரூ.31ம், இலங்கையில் ரூ.21ம் ஆக உள்ளது.நடுத்தர மக்கள் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர் தற்போது ரூ.310 வரை விற்கப்படுகிறது. இனி இதற்கு ரூ.35 வரை விலை அதிகரிக்கும் . தற்போது 14.2 கிலோ எடை கொண்ட ஒரு சிலிண்டருக்கு ரூ.262 வரை அரசு மானியம் வழங்குகிறது. இந்த விலையேற்றங்கள் தவிர்க்க இயலாதது. மத்திய அரசின் இந்த விலையேற்ற முடிவுக்கு கூட்டணிக்கட்சிகள் அனைத்தும் முழு ஆதரவையும் அளித்தன.

ஆதரவு: குறிப்பாக முக்கிய கூட்டணிக் கட்சியான தி.மு.க., இந்த விலையேற்ற முடிவின் ஒவ்வொரு கட்டத்திலும் தனது முழு ஆதரவையும் அளித்தது. தேசியவாத காங்கிரசும் இதேபோல ஆதரவு தெரிவித்தது. மம்தா பானர்ஜி, அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டார். டில்லியில்தான் இருக்கிறார் . ஆனால், பெட்ரோல் விலை உயர்வு குறித்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. என்ன காரணம் என்று தெரியவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி வலுவாக உள்ளது. இந்த விலையேற்றம் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் உறுதியை ஒருபோதும் பாதிக்காது.இவ்வாறு முரளி தியோரா கூறினார்.இக்கூட்டத்தில் பங்கேற்ற சரத் பவார், எக்காரணம் கொண்டும் விலை உயர்வை வாபஸ் பெறக்கூடாது என்று அரசைக் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. இந்த ஆண்டில் பெட்ரோல் விலை மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த விலையேற்றம் மொத்த பணவீக்கத்தை 0.9 சதவீதம் அதிகரிக்கும் என்று அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கவுசிக் பாசு தெரிவித்தார். விலை உயர்வை பா.ஜ., மற்றும் இடதுசாரிக் கட்சிகள் எதிர்த்துள்ளன.

தோட்டப்பயிர் விவசாயிகளுக்கு 3 நாள் பயிற்சி வகுப்பு; 2 நாள் “டூர்’
Kangeyam : தோட்டக்கலைத்துறை சார்பில், காங்கயம், வெள்ளகோவில், குண்டடம் பகுதியைச் சேர்ந்த 150 விவசாயிகளுக்கு தோட்டப்பயிர் சாகுபடி குறித்த மூன்று நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்களை, இரண்டு நாள் சுற்றுலா அழைத்துச்செல்ல தோட்டக்கலைத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

காங்கயம் தோட்டக்கலை உதவி இயக்குனர் தமிழ்செல்வன் தெரிவித்ததாவது: தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் மூலம் காங்கயம், வெள்ளகோவில், குண்டடம் வட்டாரங்களைச் சார்ந்த 150 விவசாயிகளுக்கு, வரும் 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை மூன்று நாட்கள், காய்த்ரி ஓட்டலில் தோட்டப்பயிர் சாகுபடி குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது.

பவானிசாகர் வேளாண் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் மற்றும் தோட்டக்கலை துறை உயரதிகாரிகள் தோட்டக்கலை பயிர் சாகுபடி பற்றி பயிற்சி அளிக்கின்றனர். இப்பயிற்சியில் பங்குபெற, காங்கயம், வெள்ளகோவில், குண்டடம் பகுதியில் இருந்து தலா 50 விவசாயிகள் வீதம் மொத்தம் 150 விவசாயிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பயிற்சிக்கு பின், விவசாயிகளை சுற்றுலா அழைத்துச்செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொடைக்கானல், பெரியகுளம், சின்னமனூருக்கு விவசாயிகள் அழைத்துச் செல்லப்பட உள்ளனர். பெரியகுளம், கொடைக்கானலில் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், கல்லூரி உள்ளது. சின்னமனூரில் மா, வாழை சாகுபடி பற்றிய நேரடி விளக்கம் அளிக்கப்படும்.

காங்கயம், வெள்ளகோவில், குண்டடம் பகுதியில் விவசாயிகள், மா, வாழை, நெல்லி, மஞ்சள் சாகுபடி செய்கின்றனர். அவ்விவசாயிகளுக்கு இப்பயிற்சி வகுப்பும், சுற்றுலாவும் பயனுள்ளதாக இருக்கும். பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ள விவசாயிகள், வட்டார தோட்டக் கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்புகொண்டு, பெயரை பதிவு செய்யலாம். இவ்வாறு, தமிழ்செல்வன் தெரிவித்தார்.

நன்றி தினமலர்

எதிர்பார்ப்பு! காங்கயத்தில் குடிநீர் பிரச்னையை தீர்க்க ரூ.47.74 கோடி செலவில் குடிநீர் திட்டம்
Kangayam : காங்கயம், வெள்ளகோவில் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், இரண்டாவது கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப் பட உள்ளது. ரூ.47.74 கோடி மதிப் பீட்டிலான இப்பணிக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது; வரும் செப்., மாதம் அப்பணி துவங்கப்படும், என எதிர்பார்க்கப்படுகிறது.

Watertank

காங்கயம் நகராட்சி பகுதி மக்களுக்கு, கொடுமுடி – காங்கயம் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினி யோகிக்கப்படுகிறது. குடிநீர் வடிகால் வாரிய பராமரிப்பில் உள்ள இத்திட்டத் தில், காங்கயம் நகராட்சிக்கு நாள்தோறும் 24 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகிக்க வேண்டும். ஆனால், தற்போது, தினமும் 13 லட்சம் லிட்டர் குடிநீர் மட்டுமே வினியோகிக்கப்படுகிறது.

காங்கயம் நகராட்சி பகுதியில் 6,000 குடிநீர் இணைப்புகள் உள்ளன. குடிநீர் வினியோகத்துக்கு ஐந்து மேல்நிலைத் தொட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதுதவிர, அமராவதி அணையில் இருந்து காங்கயத்துக்கு தாளக்கரை பம்பு ஹவுஸ் மூலம் எட்டு லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இக்குடிநீர், அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள மேல்நிலைத்தொட்டி மூலம் வினியோகிக்கப்படுகிறது.

நாளொன்றுக்கு, ஒரு நபருக்கு 70 லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும்; ஆனால், 55 லிட்டரே வழங்கப்படுகிறது; குடிநீர் பற்றாக்குறையாகவே உள்ளது. ஏழு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது 10 நாட்களாகி விடுகிறது. தண்ணீர் பிரச்னையை சமாளிக்க, 56 ஆழ்குழாய் கிணறுகள், நிலமட்ட தொட்டி யுடன் அமைக்கப்பட்டு, மோட்டார் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப் படுகிறது. அதுதவிர, 123 கைப்பம்புகள் உள்ளன. இருப்பினும், 16, 17வது வார்டு பகுதிகளில் ஆழ்குழாய் கிணறு வசதி குறைவாகவே உள்ளது.

நீண்டகாலமாக, குடிநீர் பற்றாக் குறையால் தவிக்கும் இப்பகுதி மக்களின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், ரூ.47.74 கோடி மதிப்பீட்டில் காங்கயம் பகுதிக்கு இரண்டாவது கூட்டு குடிநீர் திட்டமாக, வெள்ளகோவில் – காங்கயம் கூட்டு குடிநீர் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. கடந்த ஜன., மாதம் இதற்கான அரசாணை வெளியானது. கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து வெள்ளகோவில், காங்கயம் பகுதி களுக்கும், வெள்ளகோவில், மூலனூர் ஒன்றியங்களுக்கு உட்பட்ட 174 வழியோர கிராமங்களுக்கும் இத்திட்டத்தில் குடிநீர் வழங்கப்படும். இத்திட்டத்தில், 2.25 லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட உள்ளது.

இக்குடிநீர் திட்டத்தில், வெள்ள கோவில் நகராட்சி பகுதியில் ஒரு நபருக்கு நாளொன்றுக்கு 135 லிட்டர் குடிநீர் வழங்கப்படும். காங்கயம் பேரூராட்சி இன்னும் நகராட்சிக்கான அங்கீகாரம் (அரசாணை) பெறாததால், பேரூராட்சி யாகவே கணக்கில் எடுத்துக் கொள்ளப் பட்டு, இங்கு ஒரு நபருக்கு, நாளொன் றுக்கு 70 லிட்டர் குடிநீர் வழங்க கணக் கிடப்பட்டுள்ளது. வழியோர கிராமங்களில் ஒரு நபருக்கு 40 லிட்டர் குடிநீர் கிடைக்கும்.

இத்திட்டத்தில், வெள்ளகோவில் நக ராட்சி பகுதியில் 1, 2, 3, 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு உடைய நான்கு மேல்நிலைத் தொட்டிகள்; காங்கயத்தில், 1, 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு உடைய இரண்டு மேல்நிலைத்தொட்டிகள்; வழியோர கிராமங்களில் 10 ஆயிரம் லிட்டர் முதல் 60 ஆயிரம் லிட்டர் வரை கொள்ளளவு உடைய 99 மேல்நிலைத்தொட்டிகள் கட்டப்பட உள்ளன.

இக்கூட்டு குடிநீர் திட்டம், 80 சதவீத அரசு நிதி உதவியுடன் 10 சதவீதம் உள் ளாட்சி அமைப்புகள், 10 சதவீதம் பொது மக்கள் பங்களிப்புடன் நிறைவேற்றப்பட உள்ளது. இதற்கான ஆய்வு பணிகள் முடிக் கப்பட்டு, குடிநீர் வடிகால் வாரியம் மூலம், இப்பணிகளை செய்ய ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது. வரும் செப்., மாதம் இதற்கான பணி துவக்கப்படும் எனவும், 18 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நன்றி தினமலர்

குடிநீர் கேட்டு போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
Kangeyam : குடிநீர் கேட்டு, காங்கயம் 17வது வார்டு பெண்கள், நேற்று போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காங்கயம் நகராட்சியில் 17வது வார்டுக்கு உட்பட்ட  அய்யா செட்டியார் வீதி, கார்த்திகை நகர் பகுதியில் 200க்கும் கூடுதலான வீடுகள் உள்ளன.

Kangeyam-Police-Station

இங்கு வசிக்கும் மக்கள், கைத்தறி நெசவு வேலை, கட்டட வேலை, திருப்பூர் பனியன் கம்பெனிகளில் கூலி வேலை செய்கின்றனர். கடந்த ஒன்றரை மாதமாக, இப் பகுதிக்கு குடிநீர் வினியோகிக்கப் படாததால், அப்பகுதி மக்கள் சிரமத்தில் தவிக்கின்றனர். ஆத்திரமடைந்த 100க்கும் மேற் பட்ட அப்பகுதி பெண்கள், நகராட்சி அலுவலகத்துக்கு படையெடுத்தனர்.

நகராட்சி அலுவலகத்தில் முறையாக அதிகாரிகள் விளக்கம் தராததால், பஸ் மறியலில் ஈடுபடுவதற்காக, தாராபுரம் ரோட்டுக்குச் சென்றனர். அப்போது, அருகில் இருந்த போலீஸ் ஸ்டேஷனை பெண்கள் முற்றுகையிட்டனர்; குடிநீர் வினியோகம் செய்யாதது பற்றி போலீஸ் அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

குடிநீர் கேட்டு, போலீஸ் ஸ்டேஷனை பெண்கள் முற்றுகையிட்டதால், செய்வதறியாமல் போலீசார் திகைத்தனர். முற்றுகையிட்ட பொதுமக்களில் சிலர், அருகில் உள்ள தாசில்தார் அலுவலகத்துக்குச் சென்று இப்பிரச்னை குறித்து முறையிட்டனர். அய்யா செட்டியார் வீதியில் வசிக்கும் பெண்கள் கூறியதாவது:

கடந்த ஒன்றரை மாதமாக இப் பகுதிக்கு குடிநீர் வினியோகிக்கப்பட வில்லை. ஒரு நாள் விட்டு ஒருநாள் இரண்டு குடம் உப்பு தண்ணீர் மட்டும் கிடைக்கிறது.

இப்பகுதிக்கு ஆழ்குழாய் கிணறு அமைப்பதற்காக, நகராட்சி நடவடிக்கை எடுத்தது. ஆனால், அந்த இடத்தில் அடையாளம் மட்டுமே உள்ளது; ஆறு மாதங்களாகியும் இன்னும் ஆழ் குழாய் கிணறு அமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

குடிநீரை விலை கொடுத்து வாங்குகிறோம்; 200 ரூபாய் கொடுத்து டிராக்டரில் தண்ணீரை விலைக்கு வாங்கும் நிலைமை உள்ளது. அதற் கும், ஒரு வாரத்துக்கு முன் ‘புக்கிங்’ செய்ய வேண்டும்; அப்போது தான் தண்ணீர் கிடைக்கிறது.  இவ்வாறு, பெண்கள் கூறினர்.

குடிநீர் கேட்டு பெண்கள், போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட விபரம் குறித்து, நகராட்சிக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பின், நகராட்சி அதிகாரிகள் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தனர். பொது மக்களிடம் போலீஸ் அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள் சமரசம் பேசினர். உடனடியாக, குடிநீர் வினியோகிப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பின், போலீஸ் ஸ்டேஷனில் இருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

நன்றி தினமலர்

காலாவதியான உணவுப்பொருட்கள் அழிப்பு
Kangeyam : காங்கயத்தில், மளிகை கடைகள், பேக்கரி, ஓட்டல்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர்; காலாவதியான உணவுப்பொருட்களை பறிமுதல் செய்து, அவற்றை அழித்தனர்.

காலாவதியான உணவுப்பொருட்களை பறிமுதல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, காங்கயத்தில் கடந்த இரு நாட்களாக, அதிகாரிகள் மளிகை கடைகள், பேக்கரி, ஓட்டல்களில் திடீர் சோதனை நடத்தி காலாவதியான உணவுப்பொருட்களை பறிமுதல் செய்தனர். தாசில்தார் சிவஞானம், வருவாய் ஆய்வாளர் முரளி, சுகாதார ஆய் வாளர் ராமசாமி, உணவு ஆய்வாளர் மாணிக்கம், வி.ஏ.ஓ., பழனிச்சாமி உள்ளிட்டோர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். பழைய கோட் டை ரோட்டில் டிப்பார்ட்மென்டல் ஸ்டோரில் திடீர் சோதனை நடத்தி, காலாவதியான உணவுப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.

அதேரோட்டில், வெள்ளகோவிலில் இருந்து வந்த வேனை நிறுத்தி, அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில், காங்கயம் பகுதியில் உள்ள பல்வேறு கடைகளுக்கு விற்பனைக்கு கொடுப்பதற்காக கொண்டு வரப்பட்ட 210 ஜூஸ் பாக் கெட்டுகள், 20 இட்லி மாவு பாக்கெட்டுகள் இருந்தன. உற்பத்தி செய்யப்பட்ட தேதி, காலாவதியாகும் தேதி ஏதும் அந்த பாக்கெட்டுகளில் இல்லாத காரணத்தால், அவற்றை பறிமுதல் செய்தனர். அதேபோல், பெருந்தொழுவில் இருந்து காங்கயத்துக்கு வேனில் கொண்டு வரப்பட்ட, 400 தண்ணீர் பாக்கெட்டுகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட தண்ணீர் பாக்கெட்டுகள், ஜூஸ் பாக்கெட்டுகள், இட்லி மாவு பாக்கெட்டுகள் அழிக்கப்பட்டன. உணவுப்பொருட்கள், குழி தோண்டி புதைக்கப் பட்டன. கடந்த இரு நாட்களில், 24 கடைகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு, காலாவதியான உணவுப்பொருட்கள் பறிமுதல் செய்து அழித்தனர்.

நன்றி தினமலர்