சுளீர் வெயிலால் வேலை உறுதியளிப்பு திட்ட பணி பாதிப்பு! சம்பளத்தை குறைப்பதால் தொழிலாளர்கள் அதிருப்தி

Tirupur : கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணியாற்ற தொழிலாளர்கள் வருகை குறையத் துவங்கியுள்ளது. மேலும், நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவுக்கு வேலை செய்ய முடியாததால், சம்பளத்தில் கைவைக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்ட மக்களுக்கும், தேசிய வேலை உறுதி திட்டம், வேலைவாய்ப்பு வழங்கும் திட்டமாக உள்ளது.

tirupurnews-veyilஇதனால், பெண்கள் அதிக அளவில் பயனடைந்து வருகின் றனர். தொழில் வாய்ப்பு இல்லாத பகுதி களில் இத்திட்டம் சிறப்பாக செயல் படுகிறது. திருப்பூர் போன்ற தொழில் வளம் மிகுந்த பகுதிகளில், இத்திட்டத்தை செயல்படுத்துவது பெரிய சவாலாக இருந்து வருகிறது. இருப்பினும், மேல்மட்ட அதிகாரிகளின் நெருக்கடிக்கு உட்பட்டு, இயன்ற அளவில் திட்டம் நகர்த்தப்படுகிறது.
தினக்கூலி 100 ரூபாயாக உயர்த்தப் பட்ட பின், கட்டுமானம் மற்றும் விவசாய தொழிலாளர்கள், அத்தொழிலை விடுத்து, வேலை உறுதி திட்ட பணிகளில் கவனம் செலுத்துகின்றனர். இதனால், பிற தொழில்களில் பணியாளர் பற்றாக்குறை ஏற்பட்டது. அதிகப்படியான தொழிலாளர் கள் வரத்துவங்கிய பின், 100 நாட்களுக்கு அதிகமாக வேலை செய்தவர்கள் கட்டாய மாக நிறுத்தப்பட்டனர். இவ்வகையில், ஒருவித அதிருப்தி ஏற்பட்டது.
சில வாரங்களாக, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பொறியியல் பிரிவு அதிகாரிகள் குழு கிராமங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். ஊரக வளர்ச்சி முகமை மூலமாக, திட்ட பணிகள் குறித்து நேரடியாக “ஒயர்லெஸ்’ மூலமாக விபரம் சேகரிக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டது. இதனால், மற்ற எந்த பணிகளையும் செய்யாமல், ஒன்றிய அதிகாரிகளும், ஊராட்சி அதிகாரிகளும் திட்ட பணிகளை கவனிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

கடந்த வாரத்தில் இருந்து கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கியுள் ளதால், பணிக்கு வரும் தொழிலாளர்கள், வழக்கம்போல் வேலை செய்ய முடிவதில்லை. தொழிலாளர்களின் வருகையும் குறையத் துவங்கியுள்ளது. உச்சி வெயில் நேரங்களில் அதிக நேரம் ஓய்வெடுக்க வேண்டியுள்ளது. இதனால், நிர்ணயிக்கப்படும் அளவு பணிகள் முடிக்கப்படுவதில்லை. வேலையின் அளவு குறையும் போது, அதற்கேற்ப சம்பளமும் குறைகிறது.

வாரம்தோறும் சம்பளம் வழங்கும் போது, செய்த வேலையை அடிப்படை யாக கொண்டு தொகை வழங்கப்படு கிறது. ஒன்றாக பணியாற்றிய தொழி லாளர்களுக்கு, மாறுபட்ட சம்பளம் வழங்கும் போது, தொழிலாளர்களுக்கும், ஊராட்சி நிர்வாகத்துக்கும் இடையே மோதல் போக்கு ஏற்படுகிறது. இதேபோல், பல ஊராட்சிகளிலும் வீண் வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. கூலியை குறைப்பதால், தொழிலா ளர்கள் பணிக்கு வராதபோது, கண் காணிப்பு அதிகாரிகள், மேல்மட்ட அதி காரிகளின் நெருக்கடிக்கு ஆளாகின்றனர். எனவே, கோடை காலம் முழுவதும் சனி, ஞாயிறு நாட்களில் விடுமுறை அளிக்க வேண்டும். வழக்கமான கட்டுப்பாடு களை தளர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: , , , , , ,

Category: Currency Convertor

Leave a Reply