போலீஸ் ஸ்டேஷன்களில் இருந்த டூவீலர்கள் அவிநாசிக்கு பயணம்

Tirupur : திருப்பூர் போலீஸ் ஸ்டேஷன்களில், பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட ஆயிரத்துக்கும் கூடுத லான டூவீலர்கள், இடத்தை ஆக்கிரமித்தவாறு பல ஆண்டுகளாக கிடந்தன. அவ்வாகனங்களை, அவிநாசி பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான இடத்தில் போலீசார் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
விபத்தில் சம்பந்தப்பட்ட டூவீலர்கள், திருட்டு டூவீலர்கள், அனாதையாக கிடந்த டூவீலர்கள், திருப்பூர் போலீஸ் ஸ்டேஷன்களில் பல ஆண்டுகளாக இடத்தை ஆக்கிரமித்தவாறு கிடந்தன.

வழக்குகளில் சம்பந்தப்பட்ட இவ்வாகனங்கள், கோர்ட்டில் தீர்ப்பு வெளியாகும் வரை போலீஸ் பொறுப்பில் வைத்திருக்க வேண்டும். வடக்கு போலீஸ் ஸ்டேஷன் எதிரே, மைதானத் தில் 500க்கும் கூடுதலான டூவீலர்கள் பல ஆண்டு களாக நிறுத்தப்பட்டிருந்தன. இவை, பல ஆண்டு களாக கிடப்பதால், பழுதாகி, இனி பயன்படுத்த லாயக்கற்ற நிலையில் உள்ளன.

இந்த டூவீலர்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தில், கள்ளநோட்டு அச்சடித்த இயந்திரம் ஒன்றும், பல ஆண்டுகளாக அதே இடத்தில் உள்ளது. இதேபோல், ரூரல் போலீஸ் ஸ்டேஷன், தெற்கு போலீஸ் ஸ்டேஷனிலும், வழக்கில் சம்பந்தப்பட்ட நூற்றுக்கணக்கான டூவீலர்கள் இடத்தை ஆக்கிரமித்த வாறு கிடந்தன. இந்நிலையில், வழக்குகளில் சம்பந்தப்பட்ட டூவீலர்கள், போலீஸ் ஸ்டேஷன் களில் இடத்தை ஆக்கிரமித்து கிடப்பதை பார்த்த உயரதிகாரிகள், அவற்றை அப்புறப்படுத்தி, வேறு இடத்தில் வைக்க நடவடிக்கை எடுத்தனர்.

அதன் படி, திருப்பூர் சப்-டிவிஷனுக்கு உட்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் இருந்த ஆயிரத்துக்கும் கூடுதலான டூவீலர்கள் லாரிகளில் ஏற்றப்பட்டு, அவிநாசி பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான இடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

Tags: , , , , , ,

Category: Currency Convertor

Comments (1)

 

  1. This blog is great. How did you come up witht he idea? 4 9 4

Leave a Reply