உடுமலையில் கொலை, கொள்ளை கும்பல்: மாணவர் உட்பட 11 பேர் கைது: திருப்பூர், பல்லடத்திலும் கைவரிசை

Udumalai : உடுமலை, பல்லடம், திருப்பூர் பகுதிகளில் வழிப்பறி, கொள்ளை, கொலை சம்பவங்களில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் உட்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். ரொக்கம் 5.76 லட்சம் ரூபாய், 9 பவுன் தங்க நகை மற்றும் ஒரு கார், நான்கு பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Arrested Thief

Arrested Thief

கடந்த 2009 அக்.,9ம் தேதி, உடுமலை குமரலிங்கம் உரல்பட்டி அருகே, மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள், விஜயகுமார் என்பவரை தாக்கி, 24 ஆயிரம் ரூபாயை வழிப்பறி செய்தனர். அதே ஆண்டு நவ., 4ம் தேதி, உடுமலை தளி ரோட்டில் வாகனத்தில் சென்றுகொண்டிருந்த குருநாதனை , பைக்கில் வந்த மூன்று பேர் தாக்கி, ஒரு லட்சம் ரூபாய் வழிப்பறி செய்தனர்.

2010 மார்ச் 8ம் தேதி, எலையமுத்தூர் பிரிவு அருகே, வீட்டில் தூக்கிக் கொண்டிருந்த நாச்சம்மாள் என்பவரை அரிவாளால் வெட்டி, கொலை செய்து, அவரிடமிருந்து மூன்று பவுன் தங்க செயினை கொள்ளையடித்துச் சென்றனர். மார்ச் 10ம் தேதி, வங்கிலிருந்து 3.82 லட்சம் ரூபாய் எடுத்து, ஸ்கூட் டரில் சென்று கொண்டிருந்த தனி யார் மில் கான்ட்ராக்டர் சண்முகம் என்பவரை, உடுமலை ராகல்பாவி பிரிவு அருகே மாருதி காரில் துரத்தி வந்த நபர்கள், வாகனத்தை மோதி, இரும்பு ராடால் தாக்கி பணத்தை வழிப்பறி செய்தனர். மேலும், 50க்கும் மேற்பட்ட காஸ் சிலிண்டர்கள் திருடு போயின.

இச்சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க டி.எஸ்.பி., முருகானந்தம் தலை மையிலான தனிப்படை நடத்திய விசாரணையில், எலையமுத்தூர் பிரிவு வீட்டில் தூங்கிக் கொண் டிருந்த நாச்சம்மாளை கொலை செய்து, நகையை கொள்ளை யடித்துச்சென்ற விஜயபாஸ்கர் (32) சிக்கினான். இவனிடம் தொடர் புடைய உடுமலை பெரியகடை வீதி பிரகாஷ் (25), சீனிவாசா வீதி பூர்ணபிரகாஷ் (20), ஆண்டிய கவுண்டனூர் பிரகாஷ் (27), யு.கே.சி., நகர் சதீஷ் (19) ஆகிய நான்கு பேர் சிக்கினர்.


இவர்களில், பூர்ணபிரகாஷ் உடுமலையிலுள்ள கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு மாணவர். குழுவாக சேர்ந்து இவர் கள் கொலை, கொள்ளை , வழிப் பறி சம்பவங்களில் ஈடுபட்டு, கார், வாகனங்கள் வாங்கி சுகபோகமாக உலா வந்துள்ளனர். இதேபோல், பல்லடம் அறி வொளி நகரை சேர்ந்த முருகன் மற்றும் அவரது மனைவி ஷீலா தேவி இருவரும் ஏப்., 6ம் தேதி, நடந்து சென்ற போது பைக்கில் வந்த நான்கு பேர் கத்தியை காட்டி, இரண்டரை பவுன் செயினை வழிப்பறி செய்தனர்.

திருப்பூர் அனுப்பர்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட் பட்ட, வஞ்சிபாளையம் ரோட்டில் நின்றிருந்த புதிய பைக்கை மூன்று பேர் கண் எதிரிலேயே திருடிச்சென்றனர். டி.எஸ்.பி., ராமலிங்கம் தலைமையிலான தனிப்படை போலீசார், கரூர் அரவக்குறிச்சி ஆனந்தன் (25), திண்டுக்கல் எரியோடு மணிகண்டன் (20), சீர்காழி அருண் (22), கேரளா இடுக்கி ராஜன் (23), பட்டுக்கோட்டை குமார் (24) , கரூர் தென்னிலை சரவணன் (21) ஆகியோரை கைது செய்து, நகை மற்றும் வாகனத்தை கைப் பற்றினர்.

இவர்களிடம் ரொக்கம் 5.76 லட்சம் ரூபாய், 9 பவுன் தங்க நகை மற்றும் ஒரு கார், நான்கு பைக்கு கள் பறிமுதல் செய்யப்பட்டன. எஸ்.பி., அருண் கூறியதாவது: தொடர்ந்து குற்ற சம்பவங்கள் நடந்த நிலையில், கொலை வழக்கில் முக்கிய ஆதரமாக அரி வாள் சிக்கியது. புது மாதிரியான பெரிய அரிவாளை மார்க்கெட்டில் வாங்கிய நபர் குறித்து விசாரித்து, அடையாளம் காணப்பட்டபோது பழைய குற்றவாளி விஜயபாஸ்கர் என தெரியவந்தது.

தொடர்ந்து, நடந்த விசாரணையில் ஒரு கும்பலாக சேர்ந்து கொள்ளையடித்தவர்கள் சிக்கினர்.இதில் கல்லூரி மாணவன் பூர்ணபிரகாஷ் என்பவனும் அடக்கம். இதில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் விரைவில் பிடிக்கப்படுவர், என்றார்.

நன்றி தினமலர்

Tags: , , , , , , , , ,

Category: Currency Convertor

Leave a Reply