திருப்பூர் மாரத்தான் 2010

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆனணயம் (திருப்பூர் பிரிவு)

மற்றும்

முயற்சி மக்கள் அமைப்பு, திருப்பூர்

இனணந்து நடத்தும்

திருப்பூர் மாரத்தான் 2010

முதலாம் ஆண்டு மாவட்ட அளவிலான மாரத்தான் போட்டிகள்

அன்புடையீர்,

திருப்பூர் மாவட்ட அளவில் ஆண்கள், பெண்கள், மாணவர்கள், மாணவியர்கள் கலந்து கொள்ளும் புவி வெப்பமடைதல் விழிப்புணர்வு மாரத்தான் போட்டிகள் நடைபெற உள்ளது.

நாள் : 14.02.2010 ஞாயிறு காலை 6.30 மணிக்கு

போட்டி துவங்கும் இடம் : செயிண்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,  (J.M.H.S) காங்கயம் ரோடு, திருப்பூர்

பிரிவுகள் தூரம் முதல்பரிசு 2-ம் பரிசு 3-ம் பரிசு
ஆண்கள் 15Km ரூ.5,000/- ரூ.4,000/- ரூ.3,000/-
பெண்கள் 7Km ரூ.4,000/- ரூ.3,000/- ரூ.2,000/-
மாணவர்கள் 6Km ரூ.3,000/- ரூ.2,000/- ரூ.1,000/-
மாணவி்கள் 5Km ரூ.2,000/- ரூ.1,500/- ரூ.1,000/-

முதலிடம் வருபவர்களுக்கு ரொக்க தொகையும், தங்க நாணயமும் பரிசாக அளிக்கப்படும். முழுதூரமும் ஓடிமுடித்தவர்களுக்கு “Completion Certificate” வழங்கப்படும்.

வயது வரம்பு :

* மாணவ, மாணவியர்கள் 1-1-1992 க்கு பிறகு பிறந்திருக்க வேண்டும்

* பள்ளித் தலைமை ஆசிரியரிடம் இருந்து வயதுச் சான்றிதழ் பெற்று வருதல் வேண்டும்

* ஆண்கள், பெண்கள் பிரிவுகள் வயது வரம்பு இல்லை

தகுதி நிபந்தனைகள் :

கலந்து கொள்பவர்கள் திருப்பூர் மாவட்டத்தை சார்ந்தவராக இருக்கவேண்டும். பதிவின் போது இருப்பிடச் சான்று (அல்லது) குடும்ப அட்டை நகல் கொண்டு வரவேண்டும்.

பெயர் பதிவு நாள் :

07-02.2010 முதல் 12-02-2010 வரை

நேரம் :

காலை 10.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை

போட்டியாளர்கள் பெயர் பதிவு செய்யும் இடம் :

முயற்சி மக்கள் அமைப்பு அலுவலகம்
, புஷ்பா தியேட்டர் அருகில், 537, பி.ஏன்.ரோடு திருப்பூர் -2

மேலும் விபரங்களுக்கு செல் : 98941 24792 / 94864 35245 / 96292 64444 / 90428 26353 / 98422 96174 (பதிவு செய்ய கடைசி தேதி 12.02.2010 மாலை 7 மணி வரை மட்டுமே)

Tags: , , , , , ,

Category: News, Tirupur News, etirupur, tiruppur, tirupur, tirupur details, tirupur exporter

Leave a Reply