ஐராவதீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக கோலாகலம்
அவிநாசி: ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்த ஐராவதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். மேற்குப்பதி ஊராட்சி, அபிஷேகபுரத்தில் அபிஷேகவல்லி உடனமர் ஐராவதீஸ்வரர் கோவில், ஸ்ரீதேவி பூதேவி சமேத அழகுராஜப் பெருமாள் கோவில் உள்ளது. கடந்த 2000ம் ஆண்டு துவங்கிய திருப்பணி நிறைவுற்று கும்பாபிஷேக விழா, கடந்த 14ம் தேதி கணபதி ஹோமத்துடன் நான்கு கால யாகபூஜைகள் நடந்தன.

நிறைவுகால யாகபூஜை நேற்று அதிகாலை 4.00 மணிக்கு துவங்கியது. காலை 5.00 மணிக்கு சிவ பரிகார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. காலை 9.20 மணிக்கு ஐராவதீஸ்வரர், அபிஷேகவல்லி, அழகுராஜப் பெருமாள் சன்னதிகள் மற்றும் விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், “நமச்சிவாய
வாழ்க; நாதன் தாள் வாழ்க’ என கோஷமிட்டு பரவசமடைந்தனர். கூனம்பட்டி ஆதீனம் ராஜசரவண மாணிக்கவாசக சுவாமிகள், நடராஜ சுவாமிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், பேரூராதீனம் இளையபட்டம் மருதாசல அடிகள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடந் தது. மின்மோட்டார் மூலம் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில் தக்கார் வெற்றிச்செல்வன், திருப் பூர் எம்.பி., சிவசாமி, திருப்பணிக்குழு தலைவர் சென்னியப்பன், விழாக் குழு தலைவர் அப்புக் குட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஐராவதீஸ்வரர் கோவிலில் சென்னிமலை ஆரூர சிவாச்சாரியாரும், அழகுராஜப்பெருமாள் கோவிலில் நம்பியூர் மணிவண்ணன் அய்யங்காரும் சர்வசாதகம் செய்து கும்பாபிஷேக பூஜைகளை நடத்தினர்.
நன்றி தினமலர்










