மாணவர்களுக்கு கல்வி சுற்றுலா
Tirupur : அனைவருக்கும் கல்வித்திட்டம் சார்பில் எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு கல்வி சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் ஒன்றியத்தை சேர்ந்த ஐந்து மாணவர்கள் மூன்று நாள் கல்வி சுற்றுலா சென்றுள்ளனர்.
அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில் ஆண்டு தோறும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு இலவச கல்வி சுற்றுலா ஏற்பாடு செய்யப்படுகிறது. மாண வர்களின் கல்வி அறிவை மேம்படுத்தவும், திறன் களை வளர்க்கவும் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்தாண்டு, கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட 22 ஒன்றியங்களில் 115 மாணவ, மாணவியர் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
திருப்பூ ரில் இருந்து ஐந்து மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரி யர், கல்வி சுற்றுலாவுக்குச் சென்றுள்ளனர். திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களுக்குச் செல்கின்றனர். அங் குள்ள வரலாற்று சிறப்புமிக்க தலங்கள், அணைக் கட்டுகள், புராண கோவில்களுக்குச் செல்கின்றனர்.










