பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ‘சேவ்’ ஆதரவுக்கரம்

Tirupur : குளத்துப்புதூரில் பெற்றோரை இழந்து தவித்த இரு குழந்தைகளை, “சேவ்’அமைப்பு கண்காணிப்பில் மாவட்ட நிர்வாகம் ஒப்படைத்துள்ளது.

tirupurnews-save

tirupurnews-save

குளத்துப்புதூரை சேர்ந்த பாப்பாத்தியும், ஆண்டிபாளையத்தைச் சேர்ந்த ராமானுஜமும் தம்பதியினர். ஆனந்த்பாபு (13), மீனா(12) என இரு குழந்தைகள் உள்ளனர். இரண்டாவது பிரசவத்தின் போது ஏற்பட்ட கோளாறால், பாப்பாத்திக்கு இரு கால்களும் செயலற்றுப் போயின. உணவுக்குழாயில் ஏற்பட்ட கேன்சர் காரணமாக 2005ல் ராமானுஜம் இறந்தார்.இரு கால்களும் செயலற்ற நிலையில், தன்னுடைய குழந்தைகளை பாதுகாக்க, பாப்பாத்தியால் இயலவில்லை. பாப் பாத்திக் கும் பெற்றோர் இல்லை.உடல் ஊனமுற்றோர் உதவித்தொகை பெற்றும், உறவினர்களின் உதவியாலும், வாழ்க்கை நடத்தி வந்தார். இரு குழந்தைகளும் பள் ளிக்குச் செல்ல முடியாமல், தாயை கவனித்து வந்தனர். கடந்த பிப்., மாதம், பாப் பாத்தி தீக்குளித்து தற் கொலை செய்து கொண் டார். இதனால், இரு குழந் தைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியானது. அக்குழந்தைகளை பாப்பாத்தியின் சகோதரி வளர்த்து வந்தார்.

குழந்தைகளின் கல்வி மற்றும் வாழ்வாதாரத்துக்கு மாவட்ட நிர்வாகம் உதவி செய்ய வேண் டும் என, கடந்த திங்கள்கிழமை நடந்த மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில், கலெக்டரிடம் குளத்துப்புதூரை சேர்ந்த சம்பத் மனு கொடுத்தார். உடனே, அக்குழந்தைகளை சமூக நலத்துறை மூலம் மீட்ட மாவட்ட நிர்வாகம், “சேவ்’ அமைப்பின் பாதுகாப்பில் ஒப்படைத்துள்ளது. “சேவ்’ அமைப்பினர் கூறுகையில்,”குழந்தைகள், பிளஸ் 2 படிக்கும் வரை அனைத்து செலவுகளும் ஏற்றுக் கொள்ளப் படும். இதுவரை, பெற்றோரை இழந்த 26 குழந்தைகளை “சேவ்’ மீட்டுள்ளது,’ என்றனர்.

Tags: , , , , , , , , ,

Category: Tirupur News, tiruppur, tirupur, tirupur details

Leave a Reply