200 பஸ்களில் விளம்பர பலகைகள் அகற்றம் : ஆர்.டி.ஓ., எச்சரிக்கை

Tirupur : அரசு மற்றும் தனியார் பஸ்களில் பக்கவாட்டு பகுதிகள் மற்றும் பின்பகுதி கண்ணாடிகளில் விளம்பரங்கள் ஒட்ட தடை விதிக்கப் பட்டுள்ளது. திருப்பூரில் 200க்கும் மேற்பட்ட பஸ்களில், விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளன; பஸ் கண்ணாடிகளில் விளம்பரங்கள் இருந்தால் அபராதம் வசூலிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அரசு பஸ்கள் மற்றும் தனியார் பஸ்களில் செய்யப்படும் விளம்பரங்களால் விபத்துகள் ஏற்படுகின் றன; வ்விளம்பரங்களுக்கு கலெக்டரிடம் அனுமதி பெற வேண் டிய நிலையில், அனுமதி பெறாமலேயே பல பஸ்களில் இவ்விளம்பரங்கள் உள்ளன. இதுகுறித்து, சென் னை ஐகோர்ட்டில் கோயம் புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் சார்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

tirupurnews-busஇதற்கு பதிலளித்த ஐகோர்ட், “பஸ்சின் பின்புற கண்ணாடியில் விளம்பரம் செய்யக்கூடாது. கலெக் டர் அனுமதி பெற்ற பின், பஸ்சின் பின்புற கண்ணாடிக்கு கீழ் விளம்பரம் வைக்கலாம்.
அவ்விளம்பரம், வாகன ஓட்டிகளை தடுமாறச் செய்யாத வகையில் இருக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது. இதையடுத்து, அரசு மற்றும் தனியார் பஸ்களின் கண்ணாடிகளில் இருந்த விளம்பரங்கள் அகற்றப் பட்டன. கண்ணாடிக்கு கீழ் இருந்த அனுமதியற்ற விளம்பர பலகைகள் அகற்றப் பட வில்லை. இதுதொடர்பாக, கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர் வதாக, “கன்ஸ்யூமர் காஸ்’ நோட்டீஸ் அனுப்பியதைத் தொடர்ந்து, அரசு போக்குவரத்து துறை செயலர் மச்சேந்திரன், வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.அதில், பஸ்களில் கலெக்டர் அனுமதியின்றி வைத்துள்ள அனைத்து விளம்பர பலகைகளையும் அகற்றக் கூறியுள்ளார்.திருப்பூரில் ஓடிய 200க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்களில் இருந்த விளம்பர பலகைகள் அகற்றப்பட்டுள்ளன. அனுமதி பெற்ற பஸ்களில் மட்டும் பின்பக்க கண்ணாடிக்கு கீழ் விளம்பரங்கள் வைத்துக் கொள்ள தடையில்லாததால், குறிப்பிட்ட பஸ்களில் மட்டும் இத்தகைய விளம்பரங்கள் காணப்படுகின்றன.

திருப்பூர் வடக்கு ஆர்.டி.ஓ., ரஜினிகாந்த் கூறியதாவது:திருப்பூரில் ஓடும் போக்குவரத்து கோட்டத்துக்கு உட்பட்ட 200 பஸ்களில் விளம்பரங்கள் அகற்றப்பட்டு உள்ளன.உரிய கட்டணத்தை செலுத்தி, அனுமதி பெற்ற பஸ்களில் மட்டும், பின்பக்க கண்ணாடிக்கு கீழ் விளம்பரம் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. இதுதொடர்பாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலும் பஸ்களில் இருந்த விளம்பர பலகைகள் அகற்றப்பட்டு விட்டன. ஒன்றிரண்டு பஸ்களில் விட்டுப் போயிருந்தாலும், அவையும் அகற்றப்படும்.ஆய்வில் தெரியும் பட்சத்தில், விதிமீறிய பஸ்களுக்கு 100 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும், என்றார்.

Tags: , , , , , , , ,

Category: Tirupur News, tiruppur, tirupur, tirupur details

Leave a Reply