வியாபாரிக்கு அரிவாள் வெட்டு வெள்ளகோவிலில் பரபரப்பு
Vellakovil : ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்த மர்ம நபர்கள், பட்டப்பகலில் பப்ஸ் வியாபாரியின் கையை வெட்டியது, வெள்ளகோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளகோவில், காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர் அப்துல்குத்தூஸ் (42); இவருக்கு நான்கு மனைவியர். தினமும் பப்ஸ் எடுத்துக் கொண்டு கடை கடையாய் சென்று வியாபாரம் செய்வார்.
சம்பவத்தன்று, மூலனூரை அடுத்த செம்மண்டம்பாளையம் பிரிவில் பப்ஸ் விற்பனை செய்து கொண்டிருந்தார். இரண்டு பைக்கில் ஹெல்மெட் அணிந்து நான்கு பேர் வந்தனர். அவர்கள், அப்துல்குத்தீஸ் வலது கையை மணிக்கட்டுடன் அரிவாளால் வெட்டினர்.
நிலைகுலைந்த அவர், அந்த இடத்திலேயே மயக்கமடைந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு, திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த வெள்ளகோவில் போலீசார், அப்பகுதி மசூதி மற்றும் அப்துல்குத்தூஸ் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அளித்துள்ளனர்.










