அவிநாசியில் கைதி தப்பியோட முயற்சி

Avinashi: அவிநாசியில், கோர்ட்டுக்கு அழைத்து வந்த கைதி தப்பியோட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவிநாசிபாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில் ஏற்பட்ட அடிதடி வழக்கு தொடர்பாக நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தர்மபுரியைச் சேர்ந்த அய்யனார் ( 43), கருப்பன், அவரது அப்பா பழனி மற்றும் உறவினர் சுப்ரமணி ஆகிய நால்வரையும், நேற்று மாலை அவிநாசி குற்றவியல் நீதிமன்றத்துக்கு அவிநாசிபாளையம் தலைமை காவலர்கள் அய்யாவு, ஜெயப்பிரகாஷ் அழைத்து வந்தனர். கோர்ட் அருகில் வந்து கொண்டிருந்த போது, அய்யனார் போலீசாரிடமிருந்து விலகி, நேருவீதியில் ஓட்டம் பிடித்தார். அதிர்ச்சியடைந்த போலீசார், தப்பியோடியவரை துரத்தி பிடித்தனர். பின், நால்வரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கைதி தப்பியோடியதால், அவிநாசியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags: , , , , ,

Category: Tirupur News, avinashi, tiruppur, tirupur, tirupur details

Leave a Reply