வாழைக்கு சொட்டு நீர் பாசனம் : விவசாயிகளுக்கு செயல் விளக்கம்

Tirupur: வாழைக்கு சொட்டு நீர் பாசனம் அளிப்பது தொடர்பாக, தோட்டக்கலைத்துறை ஏற்பாடு செய்த, விவசாயிகள் சுற்றுலாவில் 125 பேர் பங்கேற்றனர்.வாழை பயிருக்கு சொட்டு நீர் பாசனம் அமைப்பது தொடர்பான சுற்றுலாவுக்கு, திருப்பூர் தோட்டக்கலைத்துறை ஆத்மா திட்டத்தில், விவசாயிகள் அழைத்து செல்லப்பட்டனர். அம்மாபேட்டை, சென்னம்பட்டி, ஜரத்தல், சனிசந்தை பகுதிகளுக்கு விவசாயிகள் சென்றனர்.

Banana Tree

Banana Tree

தோட்டக்கலை துறை அதிகாரி சந்தானகிருஷ்ணன் கூறியதாவது:திருப்பூரில் இருந்து 125 விவசாயிகள் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். சொட்டு நீர் பாசனம் அமைக்கப்பட்ட முறைகளை அறிந்து கொண்டனர். சந்தேகங்களை, சக விவசாயிகளுடன் கலந்து, தெளிவு பெற்றனர்.வாழை மட்டுமின்றி பப்பாளி, மக்காச்சோள பயிர்களுக்கும் அமைக்கப்பட்டுள்ள சொட்டு நீர் பாசன முறையையும் பார்வையிட்டனர். சொட்டு நீர் பாசனம் அமைப்பதன் மூலம் பயிர்களின் எண்ணிக்கை அதிகமாவதையும், மகசூல் அதிகரிப்பதையும் தெரிந்து கொண்டனர்.இவ்வாறு, சந்தானகிருஷ்ணன் கூறினார்.

Tags: , , , , , , , , ,

Category: Tirupur News, tiruppur, tirupur, tirupur details

Leave a Reply