புத்தகங்களுக்கான வரவேற்பு குறையவில்லை : கண்காட்சியில் ரூ.92 லட்சத்துக்கு விற்பனை
Tirupur : தொலைக்காட்சி ஊடகங் களின் தாக்கத்தால் புத்தகம் படிக் கும் பழக்கம் குறைந்து விட்டது என்ற கருத்தை பொய்யாக்கும் விதமாகவும், நல்ல புத்தகங் களுக்கு இன்னும் வரவேற்பு இருக்கிறது என்பதை மெய்ப்பிக் கும் விதமாகவும், திருப்பூரில் நடந்த புத்தக கண்காட்சியில் 92 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது.
பின்னல் புக் டிரஸ்ட் மற்றும் பாரதி புத்தகாலயம் சார்பில், திருப்பூரில் கடந்த ஜன., 29ல் இருந்து கடந்த 7ம் தேதி வரை 10 நாட்கள் புத்தக கண்காட்சி நடந் தது. 94 ஸ்டால்களில் 74 பதிப் பகங்கள் இடம் பெற்றிருந்தன. கடந்த ஆண்டு புத்தக கண்காட்சி நடந்தபோது இருந்த கூட்டத்தை விட, இம்முறை அதிகளவு எண் ணிக்கையில் வாசகர்கள் பங்கேற்றனர்.
சராசரியாக தினமும் 23 ஆயி ரம் பேர் என்ற விகிதத்தில், இரண்டு லட்சத்து 30 ஆயிரம் பேர் அரங்குகளை பார்வை யிட்டுள்ளனர். இதில், மாணவர் கள் மட்டும் 24 ஆயிரம் பேர். குறிப்பாக, கடந்த 5ம் தேதி ஒரே நாளில் 10 ஆயிரம் மாணவர்கள் அரங்குகளை பார்வையிட்டனர்.
கடந்த 5, 6, 7ம் தேதிகளில் மட் டும் தினமும் 32 ஆயிரம் பேர் புத் தக கண்காட்சியை பார்வை யிட்டுள்ளனர்.
ஒட்டுமொத்தமாக 92 லட்சம் ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன. இவை தவிர, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப்பரி சாக வழங்கப்பட்டவை மட்டும் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள்.
சங்க இலக்கியங்கள் தொடர் பான புத்தகங்கள் குறைவாக இடம் பெற்றிருந்தன என்ற குறை மட்டுமே தென்பட்டது. கவிதை கள், கதைகள், பன்நோக்கு நூல் கள் அதிகளவில் விற்பனை யாயின. பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்று நாவல்களுக்கு இன்னும் மவுசு குறையவில்லை என்பதை, அவற்றின் விற்பனை காட்டியது. மலிவுப்பதிப்பாக 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட பகவத்கீதை புத்தகங்கள் அதிகள வில் வாங்கப்பட்டன.
அதே போல், பதிவு செய்தவர் களுக்கு திருக்குர்ஆன் புத்தகம் இலவச மாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இஸ்லாமியர்கள் மட்டுமன்றி இந்துக்களும் அதிகளவில் தங்களது பெயரை ஆர்வத்துடன் பதிவு செய்திருந்தனர்.
பள்ளி மாணவர்களுக்கு பயன் படும் அகராதிகள், வழிகாட்டி புத்தகங்கள், செயல்முறை விளக்க புத்தகங்களின் விற்பனை யும் அதிகமாக இருந்தது. தன்னம் பிக்கை குறித்த புத்தகங்கள் அவ்வளவு வரவேற்பு பெறவில்லை; மிதமான அளவில் விற்பனையாயின.
தமிழ்நாடு அறிவியல் கழகம் சார்பில், புவி வெப்பமடைதல் குறித்த புகைப்பட கண்காட்சி இடம் பெற்றிருந்தது. குழந்தை களுக்கான “சிடி’கள்; குறும்படங் கள்; ஆவணப்படங்கள்; ஈரானிய திரைப்படங்கள்; உலகப்புகழ் பெற்ற திரைப்படங்களின் “சிடி’க்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.










