கோவையில் நடப்பது ‘செங்குருதி’ மாநாடு : தே.மு.தி.க., குற்றச்சாட்டு

Avinashi : ” கோவையில் நடப்பது செம்மொழி மாநாடு அல்ல; அது, செங்குருதி மாநாடு,” என தே.மு.தி.க., அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.
அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தற்போதுள்ள விலைவாசி உயர்வு, நடுத்தர மற்றும் ஏழை மக் களை கடுமையாக பாதித்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த எவ் விதமான அக்கறையும் காட்டவில்லை. இதனால், தமிழகத்தில் நடுத்தர வர்க்கத்தினர் ஏழையாவது தொடர்ந்து அதிகரித்து வருவதாக சமீபத்தில் வெளியான ஆய் வில் புள்ளிவிபரங்களுடன் தெரிவிக்கப் பட்டுள்ளது.

tirupurnews-mozhilகேரளா, மேற்கு வங்காளத்தில் இந்த எண்ணிக்கை கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. போதிய வருவாய் இல்லாத காரணத்தால், ஏற்கனவே ஏழைகள் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் இச்சூழ்நிலையில், விலைவாசி உயர்வு தொடர்ந்து அவர்களை வாட்டுகிறது. வெறும் அறிக்கையாக விட்டுக் கொண்டிருந்தால் எந்த பொருளும் விலை குறையவே குறையாது. மத்திய, மாநில அரசுகள், உணவுப் பொருட்களை இருப்பு வைத்தால் மட்டுமே விலையை குறைக்க முடியும். கடந்த ஆண்டு ரூ.30 கோடி லாபம் ஈட்டிய சர்க்கரை ஆலைகளுக்கு, இந்தாண்டு ரூ.900 கோடி லாபம் கிடைத்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் பெருகி விட்ட ஊழல்.

எங்களது முக்கிய நோக்கமே தமிழகத்தில் தீர்க்க முடியாத பிரச் னைகளை தீர்ப்பதுதான். பென்னாகரம் தொகுதியில் நாங்கள் தீவிரமான அரசியல் பணியை மேற் கொண்டுள்ளோம். கடைசி மூன்று நாட்களில் மக்கள் எடுக்கும் முடிவே, வெற்றியை தீர்மானிக்கும். அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து அப்போது முடிவு செய்யப்படும்.
தொடர் தோல்விகளால் நாங்கள் துவண்டு போய்விட வில்லை. மக்கள் மனத்தில் தே.மு.தி.க., இடம் பிடித்துள்ளது. தமிழகத்தில் மூன்றில் ஒரு கட்சியாக நாங்கள் வளர்ந்துள்ளோம்.

“முல்லை பெரியாறு அணை விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி, கேரள அரசு ஏன் நடந்து கொள்ளவில்லை என்று, கோர்ட்டில் மறுபரிசீலனை செய்ய தமிழக அரசு முயற்சிக்க வேண்டும்’ என்று தே.மு.தி.க., வலியுறுத்தியது. தற்போது அது குறித்து அரசு முயற்சி எடுத்து வருவதாக அறிகிறோம். இந்த விவகாரத்திற்காக அமைக்கப்பட்டு குழுவில் தமிழகம் இடம் பெறாது என்று அறிவித்துள்ளது தவறு.

கோவையில் நடப்பது “செம்மொழி மாநாடு அல்ல; அது, செங்குருதி மாநாடு’. ஏனென்றால் உலகளவில் யூதர்களுக்கு அடுத்தபடியாக அதிகளவில் கொலை செய்யப்பட்ட ஒரே இனம் தமிழர் கள் தான். ஒரே இரவில் 41 ஆயிரம் தமிழர்களை கொன்று புதைத்து விட்டனர். இதை நாங்கள் சொல்லவில்லை. ஐ.நா., தூதரே சொல்கிறார். இலங்கையில் நடந்த இனப் படுகொலைக்கு இந்திய அரசு உதவி செய்துள்ளது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

மூன்றாயிரம் ஆண்டு தமிழ் வரலாற்றில் இதுபோன்ற இனப்படுகொலை நடந்ததேயில்லை. தமிழர்களை கொன்று குவிப்பதை வேடிக்கை பார்த்து விட்டு, “உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடத்துவது, தமிழனுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம். இவ்வாறு, பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.

Tags: , , , , , ,

Category: Tirupur News, tiruppur, tirupur, tirupur details

Leave a Reply