ஊராட்சிகளில் வரி வசூலிக்கும் பணி மந்தம் : வீட்டு வரி ஈட்டு மானியம் ரத்து எதிரொலி
Tirupur : ஊராட்சிகளில் வரி வசூலிப்பை ஊக்குவிக் கும் வகையில், வீட்டு வரி ஈட்டு மானியம் வழங்கப் பட்டது. கடந்த சில ஆண்டுகளாக, மானிய உதவி ரத்து செய்யப் பட்டதால், வரி வசூலிப் பதில் ஊராட்சி நிர்வாகங் கள் கவனம் செலுத்துவதில்லை.
ஊராட்சிகளுக்கு முக்கிய நிதி ஆதாரமாக வரி வசூலிப்பு உள்ளது. வீட்டு வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், விளம் பர கட்டணம், அபாய கரமானதும், அருவருக்கத் தக்கதுமான வரி உள்ளிட்ட வரி இனங்கள் வசூலிக்கப்படுகின்றன. ஒவ்வொரு நிதியாண்டிலும் இறுதி மூன்று மாதங்களில் வரி வசூ லிக்கும் பணி தீவிரப் படுத்தப்படுகிறது. 100 சதவீதம் வரி வசூலிக்க, தண்டோரா மற்றும் நோட்டீஸ் மூலமாக, பொது மக் களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. விடுமுறை நாட்களிலும், வரி வசூலிக்க சிறப்பு முகாம்கள் நடத்தப் படுகின்றன.ஊராட்சிகளில் வரி வசூலிப்பை ஊக்குவிக் கும் வகையில், வீட்டு வரி ஈட்டு மானியம் வழங்கப் பட்டது. மேலும், 100 சதவீதம் வீட்டு வரி வசூலிக்கும்போது, அரசு பங்களிப்பாக 300 சதவீத ஊக்கத்தொகை வழங்கப் படும். மொத்த குறியீட் டில், 90 சதவீதத்திற்கு அதிகமாக வசூலிக்கும் போது, 200 சதவீத ஊக்கத்தொகை வழங்கப் பட்டது. 80 சதவீதம் வரை 100 சதவீதம், அதற்கு குறை யும்போது, 50 சதவீத ஊக்கத்தொகை வழங்கப் பட்டது. ஊக்கத்தொகை பெற் றால், ஊராட்சி பகுதி களில் அடிப்படை தேவையை நிறைவேற் றிக் கொள்ளலாம் என்ற ஆவலில், ஊராட்சி நிர் வாகங்கள் வரி வசூலிப் பில் அதிக அக்கறை செலுத்தி வந்தன. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக, வீட்டு வரி ஈட்டு மானியம் வழங்கப் படுவதில்லை.
மானியம் ரத்து செய்யப்பட்டதால், வரி வசூலிப்பு ஒன்றே ஊராட்சிகளுக்கு நிதி ஆதாரமாக உள்ளது. இருப்பினும், மக்கள் தொகை அடிப்படையில், நிதிக்குழு மானியம் மாதம்தோறும் வழங்கப் படுகிறது. அத் தொகையை பயன்படுத்தி, மக்களின் தேவையை உடனடியாக நிறை வேற்ற முடிவதில்லை. ஊராட்சி பகுதியில் பணிகளை செய்வதற் காக, எம்.பி., – எம்.எல்.ஏ., மாவட்ட கவுன்சிலர்களை “தாஜா’ செய்ய வேண் டிய கட்டாயம் ஏற்படு கிறது. மாறுபட்ட கட்சி யினர் பிரதிநிதிகளாக இருக்கும் போது, நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது.
திருப்பூர் ஒன்றியத் தில், வழக்கமாக மார்ச் முதல் வாரத்தில், நான்கு முதல் ஆறு ஊராட்சிகள் 100 சதவீத வரி வசூல் இலக்கை எட்டியிருக்கும்.
தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியால், இந்தாண்டு வரி வசூலிப் பில் ஊராட்சி நிர்வாகங் கள் கவனம் செலுத்தவில்லை. நிதியாண்டு நிறைவு பெற, இன்னும் 20 நாட்களே உள்ளன. வரி வசூலிப்பு 80 சதவீதத்தை கூட எட்டவில்லை. வேலை உறுதி திட்டத் துக்காக அடிக்கடி கூட் டம் நடத்தப்படுகிறது; வரி வசூலிப்பு தொடர் பாக ஆக்கப்பூர்வமான கூட்டங்கள் நடத்தப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.











