கள்ள நோட்டை கண்டறியும் கருவி தேவை : மதுக்கடைகளுக்கு வழங்க கோரிக்கை

Tirupur: “பணப்புழக்கம் அதிக முள்ள “டாஸ்மாக்’ மதுக் கடைகளுக்கு, கள்ள நோட்டுகளை கண்டறியும் கருவி அவசியம் வழங்க வேண்டும்’ என்று திருப்பூர் மாவட்ட “டாஸ்மாக்’ ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

tirupurnews duplicate rupees

tirupurnews duplicate rupees

திருப்பூர் நகர பகுதி “டாஸ்மாக்’ மதுக்கடைகள் மட்டுமின்றி, சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளிலும் மது விற்பனை அமோகமாக நடக்கிறது. சனி, ஞாயிறு மற்றும் விசேஷ நாட்களில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல், மது விற்பனை நடக்கிறது. நகரப்பகுதியில் உள்ள மதுக் கடைகளில், சராசரியாக இரண்டு லட்சம் ரூபாய் வரையும், சுற்றுப்பகுதி மதுக்கடைகளில் 75 ஆயிரம் ரூபாய் வரையும் தினமும் மது விற்பனை நடக் கிறது; தினமும் 50 ஆயிரம் ரூபாய்க்கு குறைவில்லாமல், மது வகைகள் விற்பனை யாகின்றன.லட்சக்கணக்கில் பணம் புழங்கும் “டாஸ்மாக்’ கடை களில், கள்ளநோட்டுகள் அதிக மாக புழக்கத்தில் விடப்படு கின்றன. மது விற்பனையில் பெறப்படும் 1,000 ரூபாய், 500 ரூபாய் மற்றும் 100 ரூபாய்களில் பல, கள்ளநோட்டுகள் என்பது, வங்கியில் அத்தொகையை செலுத்தும்போதே, “டாஸ்மாக்’ ஊழியர்களுக்கு தெரியவருகிறது.

பார்களில் மது குடிக்கும் பலர், சரக்கு மற்றும் “சைடிஷ்’ வாங் கும் தொகையை பார் ஊழி யர்களிடம் கொடுக்கின்றனர். சிலர், நேரடியாகவே பணம் தந்து மதுக்கடையில் சரக்கு வாங்கு கின்றனர். இவர்களில் சிலர், கள்ளநோட்டுகளை நல்ல நோட்டுகளுடன் கலந்து தரும்போது, அந்நோட்டுகளை கண்டறிய முடிவதில்லை.மது விற்ற தொகையை, “டாஸ்மாக்’ ஊழியர்கள் தினமும் வங்கியில் செலுத்துகின்றனர். 50 ஆயிரம் ரூபாய் முதல் இரண்டு லட்சம் ரூபாய் வரை செலுத்தும் போது, அதில் கள்ளநோட்டுகள் கலந்திருப்பது ஊழியர்களுக்கு தெரிவதில்லை.

பணம் செலுத்திய 10 முதல் 15 நாட்களுக்கு பின், வங்கியில் செலுத்திய தொகையில் கள்ள நோட்டுகள் இருந்ததாக, 3,000 முதல் 5,000 ரூபாய் வரை திரும்பச் செலுத்துமாறு வங்கி அதிகாரிகள் கூறுவதால், “டாஸ்மாக்’ ஊழியர்கள் அதிர்ச்சி அடைகின்றனர். திருப்பூரில் சில மதுக் கடைகளில் மட்டுமே கள்ள நோட்டு கண்டறியும் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. அக் கருவியை, “டாஸ்மாக்’ நிர்வாகமே அனைத்து கடைகளுக்கும் வாங்கி தந்தால், கள்ள நோட்டு களை கண்டறிந்து தடுக்க முடியும் என்று ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ரப்பர் ஸ்டாம்ப் அச்சடிப்பு: மது விற்ற தொகையை வங்கி யில் செலுத்தும்போது, அத் தொகையில், “டாஸ்மாக்’ கடை யின் எண்கள் குறிப்பிட்ட ரப்பர் ஸ்டாம்ப் அச்சிடும் வழக்கத்தை பின்பற்றுகின்றனர். கள்ளநோட்டு மற்றும் கிழிந்த நோட்டை, வங்கி திருப்பித்தரும் பணத்தில், தங்களது கடை எண் ரப்பர் ஸ்டாம்ப் “சீல்’ இருந்தால் மட்டுமே அதை ஏற்றுக் கொள்கின்றனர்.எனினும், கள்ள நோட்டு கண்டறியும் கருவி இருந்தால், இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என்பது மது விற்பனை ஊழியர்களின் வேண்டுகோள்.

வங்கிகளே பணம் வசூலிக்க கோரிக்கை: மது விற்பனை மூலம் தினமும் இரண்டு லட்சம் ரூபாய் வரை வசூலாகிறது; அத் தொகையை வங்கிக்குச் செலுத்த, பாதுகாப்பற்ற நிலை யில் ஊழியர்கள் செல்கின்றனர். பஸ் மற்றும் டூவீலர்களில் பணத்துடன் வருபவர்களை ஏமாற்றியும், மிரட்டியும் பணம் பறிக்கப்பட்ட சம்பவங்கள், திருப்பூரில் பலமுறை நடந்துள்ளன. எனவே, சென்னையில் இருப்பதைப்போல், வங்கிகளே குறிப்பிட்ட “டாஸ்மாக்’ கடைகளுக்கு தினமும் சென்று மது விற்பனை தொகையை பெற்றுக்கொள்ளும் நடைமுறையை, திருப்பூரில் செயல்படுத்த வேண்டும் என, டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: , , , , , , ,

Category: Tirupur News, tiruppur, tirupur, tirupur details

Leave a Reply