வாக்காளர் சேர்க்கைக்கு இன்றும், நாளையும் முகாம் ஆவணங்களை “கண்டிப்பாக’ இணைக்க வலியுறுத்தல்

Tirupur: “”வாக்காளர் சேர்க்கை, சரிபார்ப்பு பணி மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக, இன்றும், நாளையும் சிறப்பு முகாம் நடக்கிறது. 50 சதவீதத்துக்கு அதிகமான விண்ணப்பங் கள் நிராகரிக்கப்படுவதால், வயது மற்றும் முகவரி சான்றிதழ்களை கட்டாய மாக இணைத்து விண்ணப் பிக்க வேண்டும்,” என கலெக்டர் சமயமூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

electionஅவர் நிருபர்களிடம் கூறியதாவது: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தகுதி யான வாக்காளர் பெயர் விடு பட்டு இருப்பின், புதிதாக பெயர் சேர்த்துக் கொள்ளலாம். இதற்காக, ஓட்டுச் சாவடி மையங்கள், அஞ்சலகங்களில் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து கொடுக்கலாம். கடந்த முறை ஒரு லட்சம் விண்ணப் பங்கள் பெறப்பட்டன; 51 ஆயிரம் விண்ணப்பங்கள் நிரா கரிக்கப்பட்டன. 50 சதவீதத்துக் கும் அதிகமான விண்ணப்பங்களை நிராகரிப்பதற்கு காரணம், வயதுச்சான்று மற்றும் முகவரிச் சான்று இணைக்கப்படாததே. கடந்த ஜன., முதல் தேதி யன்று 18 வயது பூர்த்தி அடைந் தவர்கள் விண்ணப்பிக்கலாம். 18 வயது முதல் 25 வயது வரை யுள்ள நபர்கள் கட்டாயமாக வயதுச்சான்று மற்றும் முகவரிச் சான்றை இணைக்க வேண்டும்.

25 வயதுக்கு மேற்பட்டவர்கள் எந்த தொகுதியில் பெயர் சேர்க் கப்பட்டு இருந்தது என்பதை குறிப்பிட வேண்டும். இல்லா விட்டால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.18 வயதில் இருந்து 25 வயது உடையவர்களின் விண்ணப்பங் கள் அதிகளவு நிராகரிக்கப்படு கின்றன. மக்கள் தொகை கணக் கெடுப்பில் உள்ள இந்த வயது உடையோரின் எண்ணிக்கைக் கும், வாக்காளர் பட்டியலில் உள்ளோரின் எண்ணிக்கைக் கும் நிறைய வேறுபாடுள்ளது.எனவே, உரிய ஆவணங்கள் கட் டாயம் தேவை.

கடந்த முதல் தேதியில் இருந்து இதுவரை மாவட்டத்தில் 4,025 விண் ணப்பங்கள் புதிதாக பெயர் சேர்க்க கொடுக்கப்பட்டுள்ளன. பெயர் நீக்கலுக்கு 32 விண்ணப்பங்கள்; முகவரி மாற்றத்துக்கு 168 விண்ணப்பங்கள்; பெயர் திருத்தத்துக்கு 56 விண்ணப்பங் கள் பெறப்பட்டுள்ளன. இன்றும், நாளையும் அனைத்து ஓட்டுச்சாவடி மையங்கள் மற்றும் தபால் நிலையங்களில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத் தம் உள்ளிட்ட சிறப்பு முகாம் கள் நடத்தப்படுகின்றன. வெளி மாவட்ட மக்களில் பலருக்கு இரு ஓட்டுரிமைகள் உள்ளன.

அவற்றை நீக்கவும் மக்கள் முன்வர வேண்டும். போது மான விண்ணப்பங்கள் இருப்பில் உள்ளன. எனினும் விண்ணப் பங்களை ஜெராக்ஸ் எடுத்தும் பயன் படுத்தலாம்.இவ்வாறு, கலெக்டர் தெரிவித்தார்.அட்டை மட்டும் போதாது கலெக்டர் கூறுகையில், “”பெரும்பாலான பொதுமக்கள் வரைவு வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பதில்லை. தேர்தல் சமயத்தில் மட்டும் பட்டியலில் பெயர் உள்ளதா என பார்க் கின்றனர். தேர்தல் அடையாள அட்டை இருந்தால் மட்டும் போதாது. சில சமயங்களில், பட்டியலில் பெயர் விடுபட் டிருக்கக்கூடும். தேர்தல் அடையாள அட்டை உள்ளது என கவன மின்றி இருக்கக் கூடாது.


அருகில் உள்ள ஓட்டுச்சாவடிக்குச் சென்று, சரிபார்த்துக் கொள்ள வேண்டும்,” என்றார்.ஒப்புகைச்சீட்டு முக்கியம் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து கூறுகையில், “”இதுவரை 80.43 சதவீத பணி நிறைவடைந்துள்ளது. மேலும் விண்ணப்பங்கள் தருவிக்கப்பட்டுள்ளன. கணக் கெடுப்பு அலுவலர் தரும் ஒப்புகைச்சீட்டு முக்கியம். பத்திரமாக வைத்திருக்க வேண்டும். “”அதை காண்பித்தால் மட்டுமே போட்டோ எடுத்து அடை யாள அட்டை வழங்க முடியும். உங்கள் பகுதியில் கணக் கெடுப்பு அலுவலர் வராவிட்டால், மாநகராட்சி கமிஷன ருக்கோ, வேறு பகுதியாக இருப்பின் கலெக்டர் அலுவலகத் துக்கோ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்,” என்றார்.

நன்றி தினமலர்

Tags: , , , , ,

Category: Tirupur News, tiruppur, tirupur, tirupur details, tirupur district

Leave a Reply