உடுமலை அருகே யானைகள் அட்டகாசம்
Udumalai : உடுமலை அருகே விளைநிலங்களுக்கு “விசிட்’ செய்யும் யானைகள் தென்னங்கன்று மற்றும் தென்னை மரங்களை சேதப்படுத்தி வருகிறது.

tirupurnews-elephant
உடுமலை அருகே வனஎல்லையையொட்டி, கொங்குரார்குட்டை, தேக்கல்கரடு பகுதிகள் அமைந்துள்ளன. திருமூர்த்தி அணைக்கு குடிநீர் பருக செல்லும் யானைகள் கூட்டம் அவ்வப்போது அருகிலுள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து சேதம் விளைவிக்கின்றன. தற்போது, கோடைகாலம் துவங்கியுள்ளதால், தாகத்தை தீர்க்க தற்போது யானைகள் கூட்டம் கூட்டமாக திருமூர்த்தி அணைக்கு வரத்துவங்கியுள்ளன. இந்நிலையில், விளைநிலங்களுக்குள் புகுந்து சேதம் விளைவித்து வருவதாக, விவசாயிகள் தெரிவித்தனர்.
விவசாயிகள் கூறியதாவது: கொங்குரார் குட்டை தேக்கல் கரடு பகுதியில், நேற்றுமுன்தினம் இரவு திருமூர்த்தி அணைக்கு குடிநீர் குடிக்க சென்ற யானைகள் கூட்டம் அருகிலுள்ள தோட்டங்களுக்கு சென்று தென்னங்கன்றுகளை பதம் பார்த்தது.இதில், மூன்று விவசாயிகளின் தோட்டத்திலுள்ள 40க்கும் மேற்பட்ட தென்னங்கன்றுகள் மற்றும் தென்ன மரங்களை துவம்சம் செய்துள்ளது. இதனால், நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றனர்.
Tags: cinema, etirupur, kollywood, Tamil Nadu, tiruppur, tiruppur details, tirupur, tirupur details, udumalai
Category: Tirupur News, Udumalpet, Udumalpet news, tiruppur, tirupur, tirupur details