பணம் பறிக்க முயன்ற நால்வர் கைது
Tirupur : திருப்பூர், பாண்டியன் நகர் டீச்சர் காலனியைச் சேர்ந்தவர் குமார். இவர், நேற்று முன்தினம் இரவு, திருப்பூர் மின்மயான ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை வழிமறித்த நான்கு பேர், கத்தியை காட்டி மிரட்டி, பணம் பறிக்க முயன்றனர். குமார் கூச்சலிட்டதையடுத்து, அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள், நான்கு பேரையும் பிடித்து, திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.போலீஸ் விசாரணையில், பிச்சம்பாளையத்தைச் சேர்ந்த முகமது ஹக்கீம் ( 24), இளங்கோ நகரைச் சேர்ந்த அச்மீர் ராஜா (24), பழனியைச் சேர்ந்த துர்கை ராஜ் ( 28), விஜய் பிரான்சிஸ் ( 25) என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.










