இலவச மருத்துவ முகாம்

Tirupur: துணை முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, 23, 24வது வட்ட தி.மு.க., சார்பில் இலவச மருத்துவ முகாம் திருப்பூரில் நடந்தது.ஓடக்காடு, கே.என்., புரம் நகராட்சி பள்ளி வளாகத்தில் முகாம் நடந்தது; வார்டு செயலாளர் சுகுமார் தலைமை வகித்தார்.

tirupurnews-mkstaline24வது வட்ட செயலாளர் மோகன்ராஜ் வரவேற்றார். நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் சாமிநாதன், மேயர் செல்வராஜ், மாநகர துணை செயலாளர் நாகராஜ் பங்கேற்றனர்.ஸ்ரீகுமரன் மருத்துவமனை, தீபா அறுவை சிகிச்சை மருத்துவமனை மற்றும் லட்சுமி நாராயணா குழந்தைகள் நல மருத்துவமனை டாக்டர்கள் குழு, மருத்துவ பரிசோதனை செய்தது. 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றனர்.


Tags: , , , , ,

Category: Tirupur News, tiruppur, tirupur, tirupur details

Leave a Reply