தங்க பதக்கம் வென்ற ஜெயந்தி பள்ளி மாணவர்கள்
Tirupur: ‘நியூ சவுத் வேல்ஸ்’ என்ற ஆஸ்திரேலியா பல்கலை மற்றும் ‘மேக் மில்லன் பப்ளீசர்ஸ்’ நிறுவனம் இணைந்து ஆண்டுதோறும் மூன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 மாணவர் களுக்கு ‘எஜூகேஷனல் அசெஸ் மென்ட்’ விருதுக்கான திறனாய்வு தேர்வு நடத்துகின்றன.கடந்த 2009ல் நடந்த தேர்வில், இந்தியா, பக்ரைன், பூட்டான், ஈரான், ஈராக், குவைத், மால்தீவ்ஸ், நேபால், பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 16 நாட்டை சேர்ந்த பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

Gold metal
இதில், 2,631 பள்ளிகளைச் சேர்ந்த இரண்டு லட்சத்து 7,683 மாணவர்கள் தேர்வு எழுதினர். ஆங்கிலம், அறிவியல், கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நடந்தன. ஆன்-லைன் மூலம் 60க்கும் மேற்பட்ட ஜெயந்தி பள்ளி மாணவர்கள் திறனாய்வு தேர்வு எழுதினர்.இதற்கான தேர்வு முடிவு, தற்போது வெளியிடப்பட்டது.
இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற தேர்வில், 61 மாணவர்களுக்கு தங்க பதக்கம் கிடைத்துள்ளது. தமிழகத்தில் ஆறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் விருது பெற்றுள்ளனர்.இதில், திருப்பூர் ஜெயந்தி மெட்ரிக் பள்ளி நான்காம் வகுப்பு மாணவியர் நிலா தாரணி, சந்தோசிகா ஆகிய இருவர் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் தேர்வெழுதி, அதிக மதிப்பெண் பெற்று தங்கம் வென்றுள்ளனர்.ஏழாம் வகுப்பு மாணவன் ஹெரின், மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்று பரிசு மற்றும் சான்றிதழ் பெற்றுள்ளான்.
மூன்றாம் ஆண்டாக, இப்பள்ளி மாணவர்கள் தொடர்ந்து இவ்விருதை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு, தாளாளர் கிருஷ்ணன், பள்ளி முதல்வர் மஞ்சுளா, கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியர்கள் மாதவி, ஸ்ரீமதி, கார்த்திகா ஆகியோர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.










