வரும் கல்வியாண்டில் 1,557 மாணவர் சேர்க்கை: அரசு கல்லூரிகளில் விண்ணப்பம் வினியோகம்
Tirupur: இளங்கலை மற்றும் முதுகலை பாடப்பிரிவுக்கு அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படுகின்றன. திருப்பூரில் எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லூரி மற்றும் சிக்கண்ணா அரசு கல்லூரி களில் 2010-11ம் ஆண்டுக்கு 1,557 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது.
சிக்கண்ணா அரசு கலை கல்லூரி: சிக்கண்ணா அரசு கலை கல்லூரியில் இளங்கலை பிரிவில் உள்ள பாடப் பிரிவு மற்றும் அதன் சேர்க்கை இடத்திற்கான விபரம்: பி.ஏ., வரலாறு (50); பி.எஸ்.சி., கணிதம் (தமிழ் வழி 40 + ஆங்கில வழி 35); இயற்பியல் (தமிழ் வழி 24 + ஆங்கில வழி 24); விலங்கியல் (தமிழ் வழி 24 + ஆங்கில வழி 24); கம்ப்யூட்டர் சயின்ஸ் (முதல் ஷிப்டு 60 + இரண்டாவது ஷிப்டு 60); காஸ்டியூம் டிசைன் (50); பி.காம்., (100); பி.காம்., சி.ஏ., (60). முதுகலை பிரிவு: எம்.எஸ்.சி., விலங்கியல் (40); எம்.எஸ்.சி., இயற்பியல் (30); விலங்கியல் (40); எம்.காம்., ஐ.பி., (40) ஆகிய பாடப்பிரிவில் மொத்தம் 701 இடங்களுக்கான சேர்க்கை நடக்கிறது.
எல்.ஆர்.ஜி., மகளிர் அரசு கலை கல்லூரி: பி.ஏ., தமிழ் (60); ஆங்கிலம் (60); வரலாறு (தமிழ் வழி 42 + ஆங்கில வழி 40); பொருளியல் (தமிழ் வழி 30 + ஆங்கில வழி 30); பி.எஸ்.சி., கணிதம் (தமிழ் வழி 35 + ஆங்கில வழி 35); இயற்பியல் (24); இயற்பியல் சி.ஏ., (50); வேதியியல் (தமிழ் வழி 25 + ஆங்கில வழி 25); விலங்கியல் (தமிழ் வழி 20 + ஆங்கில வழி 20); கம்ப்யூட்டர் சயின்ஸ்(முதல் ஷிப்டு 60 + இரண்டாவது ஷிப்டு 60); பி.காம்., (முதல் ஷிப்டு 60 + இரண்டாம் ஷிப்டு 60); பி.காம்., சி.ஏ., (முதல் ஷிப்டு 60 + இரண்டாவது ஷிப்டு 60). முதுகலை பிரிவு: எம்.ஏ., தமிழ் (40); ஆங்கிலம் (40); கணிதம் (40); கம்ப்யூட்டர் சயின்ஸ் (30) என இக் கல்லூரியில் மொத்தம் 856 சேர்க்கை நடக்கிறது.
சிக்கண்ணா கல்லூரி முதல்வர் முகமதுகனி கூறியதாவது: விண்ணப்பங்கள் வரும் 28ம் தேதி வரை வழங்கப்படும். விண்ணப்பம் பெற 25 ரூபாய், பதிவுக்கு இரண்டு ரூபாய் என 27 ரூபாய் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். எஸ்.சி., – எஸ்.டி., பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் சாதி சான்றிதழ் நகலை காண்பித்து இலவசமாக விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பத்துடன் மதிப்பெண் பட்டியல், சாதி சான்றிதழ் மற்றும் மாற்று சான்றிதழ் நகல்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை விண்ணப்பங்கள் கல்லூரியில் வழங்கப்படுகின்றன. அரசு அறிவிப்பு வெளிவந்த பின், மாணவர் சேர்க்கை இன வாரியாக மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும், என்றார்.
நன்றி தினமலர்










