உதவி தொடக்கக்கல்வி அலுவலகம் அமைக்க வலியுறுத்தல்

Tirupur : “உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தை, செங்கப்பள்ளி யில் அமைக்க வேண்டும்’  என, கலெக்டரிடம் நேற்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

திருப்பூர் கலெக்டர் அலு வலகத்தில், மக்கள் குறைகேட்பு கூட்டம், கலெக்டர் சமயமூர்த்தி தலைமையில் நேற்று நடந்தது. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, ஊத்துக்குளி கிளை சார்பில் கொடுக்கப்பட்ட மனு: உதவி தொடக்கக்கல்வி அலு வலகம், ஊத்துக்குளியில் வாடகை கட்டடத்தில் இயங் கியது; இதற்கான ஒப்பந்தம் 2009 பிப்., மாதத்துடன் காலாவதி யானது.

குன்னூர் ஒன்றிய நடு நிலைப்பள்ளியில் இந்த அலு வலகம் செயல்பட தேவையான இடம் உள்ளது. இதுகுறித்து அப் பள்ளி தலைமையாசிரியர், எழுத்துப்பூர்வமாக உதவி தொடக்க கல்வி அலுவலருக்கு தெரிவித்துள்ளார். ஆனால், கைத்தமலை அரசு பள்ளி வளா கத்தில் உதவி தொடக்கக்கல்வி அலுவலகம் செயல்படுகிறது.கைத்தமலைக்குச் சென்று வர மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.

சிலர், 30 கி.மீ., தூரம் கடக்க வேண்டியுள்ளது. அலுவலகத் தில் குடிநீர், கழிப்பிட வசதி உள் ளிட்ட எந்த அடிப்படை வசதி களும் இல்லை. மேலும், ஊத்துக் குளியில் இருந்து இரண்டு கி.மீ., தூரம் நடந்து செல்ல வேண்டி யுள்ளது. செங்கப்பள்ளியில் நிரந் தர அலுவலகம் அமைக்க, ஊராட்சி நிர்வாகம் தயாராக உள் ளது. அதுவரை தற்காலிகமாக செயல்படுவதற்கு, செங்கப் பள்ளி நடுநிலைப்பள்ளியில் இடம் உள்ளது. பள்ளி நிர்வாக மும்,  கிராமக்கல்விக்குழுவும் தர சம்மதித்து தீர்மானம் நிறை வேற்றி உள்ளன.

ஊத்துக்குளி ஒன்றியம் அவி நாசி தாலுகாவுடன் இணைந் துள்ளது. கருவூலக பணிக்கு அவி நாசி செல்ல வேண்டியிருப் பதால், உதவி தொடக்கக்கல்வி அலுவலகம், செங்கப்பள்ளியில் அமைந்தால் வசதியாக இருக் த்ம். மாலை நேரத்தில், பெண் ஆசிரியர்களும் சென்று வர பாது காப்பாக இருக்கும். எனவே, செங்கப்பள்ளியில் தவி தொடக்கக்கல்வி அலுவலகம் அமைக்க, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து முன்னணி கோட்ட ஒருங்கிணைப்பாளர் கிஷோர் கொடுத்த மனு: வீரபாண்டி கிராமம் க.ச., எண் 363 இட்டேரி புறம்போக்காக உள்ளது. இது, பொங்கலூர் வரை செல்லும் ரோடாக, பொதுமக்களால் பல ஆண்டுகளாக பயன்படுத்தப் படுகிறது. இந்த வழித்தடத்தை சிலர் ஆக்கிரமிக்க முயற்சி செய்கின்றனர். பாதையை குடி யிருப்பு பகுதியாக மாற்ற, பொது மக்கள் ஆட்சேபம் தெரிவித்துள் ளனர். உண்மையை மறைத்து பட்டா பெற்றுள்ளதை  ஆய்வு செய்து, பட்டாவை ரத்து செய்ய வேண் டும், என்று தெரிவித்துள்ளார்.

முத்தணம்பாளையம் ஊராட்சி எம்.புதுப்பாளையம் ஆதிதிராவிடர் காலனி பகுதி மக்கள் கொடுத்த மனு: எம்.புதுப் பாளையம் பகுதியில், ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் 46 பேருக்கு தலா மூன்று சென்ட் நிலம், 2005ம் ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஐந்து ஆண்டு கள் நிறைவடைந்தும் இதுவரை இப்பகுதிக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை. பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை, என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.குறைகேட்பு கூட்டத்தில், நேற்று மொத்தம் 384 மனுக்கள் கொடுக்கப்பட்டன.

நிவாரண உதவி: கேரளாவில் இடுக்கி மாவட்டம் தேக்கடியில், 2009 செப்.,ல் படகு விபத்து நடந்தது; பல்லடம் தாலுகா பெரியார் நகரை சேர்ந்த பஞ்ச லிங்கம் மனைவி சுதா, மகள்கள் பிரகதீஸ்வரி, இலக்கியா ஆகி யோர் பலியாயினர்.

கேரள அரசு சார்பில், அவரின் குடும்பத்துக்கு ஐந்து லட்சம் ரூபாய் நிவாரண தொகையாக வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை, கலெக்டர் சமயமூர்த்தி, பஞ்ச லிங்கத்திடம் வழங்கினார்.

Tags: , , , , , , , ,

Category: Tirupur News

Leave a Reply