எச்.ஐ.வி., பாதித்தோருக்கு கடனுதவி வழங்க கோரிக்கை
Tirupur : “எச்.ஐ.வி., பாதிப்பு உள்ளோருக்கு மாதாந்திர உதவித்தொகை, தொழில் தொடங்க கடனுதவி வழங்க வேண்டும்’ எனக்கோரி, கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் சமயமூர்த்தி தலைமையில் நேற்று நடந்தது.
“திருப்பூர் நெட்வொர்க் பார் பாசிட்டிவ் உமன்’, “நேட்டிவ் மெடிகேர் சாரிட்டபிள் டிரஸ்ட்’ சார்பில் எச்.ஐ.வி., பாதிப்புக்குள்ளான 70 பெண்கள் கலெக்டரை சந்தித்தனர். அவர்கள், “எச்.ஐ.வி., பாதித்த பெண்களுக்கு விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப் பட்டோர், ஆதரவற்ற பெண்கள் உள்ளிட்ட பிரிவுகளில் மாதாந்திர உதவித்தொகை வழங்க வேண்டும். பாதிப்புக்கு உள்ளானவர்களில் சிலருக்கு ரேஷன் கார்டு இல்லை; அவர்களுக்கு ரேஷன் கார்டு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழில் துவங்க தேவையான கடன் மற்றும் இதர உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, கோரிக்கை விடுத்தனர்.
“இதுகுறித்து உடனடியாக பரிசீலிக்கப்படும்,’ என கலெக்டர் தெரிவித்தார். தாராபுரம் நகராட்சி, எரிச்சிமஸ்தான் நகர் பகுதி மக்கள் கொடுத்த மனுவில், “நாங்கள் 20 ஆண்டுகளாக இப்பகுதியில் வசிக்கிறோம். இன்னும் பட்டா வழங்கப்பட வில்லை. ஐந்தாண்டு குடியிருந்தால் பட்டா வழங்கலாம், என்ற அரசு உத்தரவின் அடிப்படையில், இப்பகுதியில் குடியிருக்கும் அனைவருக்கும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும்’ என, கோரிக்கை விடுத்திருந்தனர். மொத்தம் 289 மனுக்கள் பெறப் பட்டன.
Comments (1)











This blog is great. How did you come up witht he idea? 5 8 9