மனைவியை கொன்ற கணவன் கைது

tirupur: மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கழுத்தறுத்துக் கொலை செய்த கணவனை, திருப்பூர் ரூரல் போலீசார் கைது செய்தனர்.கும்பகோணத்தைச் சேர்ந்தவர் அருள். கலாவதி (26) என்பவரை மூன்றாண்டுக்கு முன் காதலித்து மணம் புரிந்தார். இவர்களுக்கு ஹரிணி என்ற ஒன்றரை வயது குழந்தை உள்ளது. அருள், கலாவதி இருவரும் திருப்பூர் வீரபாண்டி பூந்தோட்டம் பகுதியில் வசித்து வந்தனர். குழந்தை ஹரிணி, அருளின் பெற்றோரிடம் வளர்ந்து வருகிறாள்.
arrested

கலாவதி அருகில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். உடன் பணிபுரிந்த செந்தில்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், கலாவதி வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.செந்தில்குமாரும், கலாவதியும் 10 நாட்களுக்கு முன் சென்னை சென்றுள்ளனர். அருள், கலாவதியை சென்னையில் இருந்து நேற்று முன்தினம் திருப்பூர் அழைத்து வந்துள்ளார்.

மீண்டும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதால், நேற்று முன்தினம் இரவு, மனைவி கலாவதியை அருள் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார். பின், பிரேதத்தை சாக்குமூட்டைக்குள் கட்டி, சற்று தூரத்தில் உள்ள சாயக்கழிவு நீர் “மேன் ஹோல்’க்குள் வீசி விட் டார். அதை எரிக்கவும் முயன் றுள்ளார். பிரேதம் கிடப்பது குறித்த தகவல் அறிந்த ரூரல் போலீசார், கலாவதியின் பிணத்தை மீட்டு, அருளை கைது செய்தனர்.

நன்றி தினமலர்

Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

Category: Tirupur News, tiruppur, tirupur, tirupur details, tirupur district, tirupur exporter

Leave a Reply