‘நிட்டெக்ஸ்’ கண்காட்சி நிறைவு
Tirupur : திருப்பூரில் கடந்த நான்கு நாட் களாக நடந்த “நிட்டெக்ஸ் 2010′ கண் காட்சியில், கடந்தாண்டை காட்டிலும் பார்வையாளர்கள் குறைவாக பங்கேற்றுள்ளனர். பனியன் தொழில் மந்தமாக இருந்தாலும், தொழில் முனைவோர் அதிகளவில் வர்த்தக விசாரிப்பு நடத்தி உள்ளதாக, கண் காட்சி பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.
“விஷன் டிரேடு எக்ஸிபிஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் “நிட்டெக்ஸ்’ இயந்திர தொழில்நுட்ப கண்காட்சி, திருப்பூரில் நான்கு நாட்கள் நடந்தது. இந்தியா, வங்காளதேசம் உள்ளிட்ட 22 நாட்டு நிறுவனங்கள், 400 வகை யான “பிராண்ட்’ தயாரிப்புகளை பார்வைக்கு வைத்திருந்தன. இதர பிரிவுகளிலும், 2,000க்கும் அதிகமான பொருட்கள் இடம் பெற்றிருந்தன. கண்காட்சியில், பனியன் தொழில் சம்பந்தப்பட்ட மெஷின்கள் மட் டுமே இடம்பெறும்; அதுகுறித்த வர்த்தக விசாரிப்புகள் நடக்கும். டெக்ஸ்டைல்ஸ் கமிட்டி ஆலோ சனைப்படி, தொழில் முனை வோருக்கு பயனளிக்கும் வகையில், பிற சேவைகளும் இடம் பெற்றி ருந்தன. பனியன் தொழில் சார்ந்த அனைத்து பிரிவு நிறுவனங்களும் பங்கேற்றிருந்தன.
இயந்திரங்களுடன் “ஜாப் ஒர்க்’, “கார்மெண்ட் அசசரீஸ்’, “டெக்னிக் கல் டெக்ஸ்டைல்ஸ்’, “பேப்ரிக்ஸ்’ என, தொழில் துவங்க விரும்பும் முனைவோருக்கு உதவும் வகை யிலான ஸ்டால்களும் அமைக்கப்பட் டிருந்தன. இதனால், பார்வை யாளர்கள் எதிர்பார்த்த அளவு வந்து சென்றனர். “விஷன் டிரேடு எக்ஸ்பிஷன்’ நிர்வாக மேலாளர் நந்தகோபாலிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது: கண்காட்சியில், அனைத்து பிரிவு களின் பங்களிப்பும் இருந்தது. நுழைவு கட்டணம் வசூலிக்க வில்லை; பார்வையாளர்களின் தேவையை அறிந்து கொள்ளும் வகையில் வருகை பதிவு மட்டும் செய்யப்பட் டது. நான்கு நாட்களில், 14 ஆயிரத் திற்கும் அதிகமானவர்கள் பங்கேற் றுள்ளனர்.
கடந்தாண்டை காட்டி லும், பார்வையாளர் வருகை குறை வாக இருந்தாலும், தற்போதைய தொழில் நிலவரத்திற்கு, இவ்வளவு பேர் வந்திருந்தது மகிழ்ச்சி. புது புது மெஷின்கள் வந்திருந்த தால், வர்த்தக விசாரணை ஓரளவுக்கு நடந்துள்ளது. பனியன் தொழில் சம்பந்தமான அனைத்து சேவையும் இடம் பெற்றதால், தொழில் முனை வோர் அதிகம் பங்கேற்று பயனடைந் துள்ளனர்.
உடனடி உபயோகமாக இல்லாவிட்டாலும், வரும் காலங் களில், கண்காட்சி அனுபவம் மிகுந்த பயனளிக்கும் என நம்புகிறோம். அத்தியாவசிய பிரிவுகளில், பல் வேறு தகவல்களை வெளிக் கொணரும் வகையில் கருத்தரங்கு நடத்தப்பட்டது. தேர்வு பெற்ற தலைப்புகளில், தொழில்நுட்ப வல்லுனர்களை கொண்டு, எஸ். எஸ்.பி., நிறுவன பங்களிப்புடன் நடந்த கருத்தரங்குகளிலும் ஏராளமானோர் பங்கேற்றனர். இவ்வாறு, நந்தகோபால் தெரிவித்தார்.
Comments (1)











I like the layout of your blog and I’m going to do the same thing for mine. Do you have any tips? Please PM ME on yahoo @ AmandaLovesYou702 2 2 9