கொலையான வாலிபர் யார்? போலீஸ் விசாரணை தீவிரம்
Tirupur : திருப்பூர் மாநகராட்சி பொதுக்கழிப்பிடத்தில் 25 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர், அடித்து கொலை செய்யப்பட்டார்; அந்த உடல் எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. கொலையானது யார் என கண்டறிய முடியாத நிலையில், அவ்வாலிபரின் அடையாளங்கள் அடங்கிய நோட்டீசை காவல் துறை வெளியிட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டில் உள்ள பொதுக்கழிப்பிடத் தில், கடந்த 5ம் தேதி ஒரு வாலிபர் பிரேதம் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. அடித்துக் கொலை செய்யப் பட்டு, பின்னர் எரித்திருக் கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பொதுக்கழிப்பிட வளாகத் தில், மாநகராட்சி துப்புரவு லாரி டிரைவர்கள் சிலர் தின மும் அமர்ந்து, மது அருந்து வது வழக்கம் என்ற தகவல் போலீசாருக்கு கிடைத்தது.அதையடுத்து, துப்புரவு லாரி டிரைவர்கள் நான்கு பேரை பிடித்து விசாரித்தனர். கொலை யான வாலிபரின் புகைப் படத்தை கம்ப்யூட்டரில் வரைந்து, கருகிய அவரது முகப்பகுதிகளை நீக்கி, முகத் தோற்றத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கொலையான வாலிபர் பற்றிய அடையாள விபரங்கள் அடங் கிய நோட்டீசை, அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.கொலையான வாலிபர், 25 வயது மதிக்கத்தக்கவர்; மாநிறம், மெலிந்த தேகம்; உயரம் 5.5 அடி இருக்கும். வலதுபுற தொடையில், வெளிப்புறம் பழைய நீளமான காயத்தழும்பு உள்ளது.
சடலம் எரிந்த நிலையில், கருகிய சிவப்பு கட்டம் போட்ட வெள்ளை நிறம் கலந்த சட்டை “பீஸ்’; பேண்ட் பின்புற பாக்கெட்டில் “வின்னர் டவுசர்’ என்ற லேபிள் காணப்பட்டது. கொலையான வாலிபரின் வலது கையில் முழங்கைக்கு கீழ் ஆங்கிலத்தில், ஜி.எம்.கே., என்றோ, ஜி.என்.கே., என்றோ பச்சை குத்தப்பட் டுள்ளது. இந்நபரை பற்றி தகவல் தெரிந்தால், திருப்பூர் டி.எஸ்.பி., அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது.
இக்கொலை தொடர்பாக போலீசாரால் விசாரிக்கப்பட்ட, துப்புரவு லாரி டிரைவர்கள் நான்கு பேர், மேயர் அலுவல கத்துக்கு நேற்று வரவழைக்கப் பட்டு, எச்சரிக்கைக்கு பின், அவர்களுக்கு டூட்டி வழங்கப் பட்டது.
பிடிபட்டது கொலையாளியா? இந்நிலையில், டூவீலர் திருட்டு சம்பவத்தில், எம்.எஸ்., நகர் பகுதியை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த வாலிபருக்கு, பொதுக் கழிப்பிடத்தில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம் பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார், விசாரணை நடத்தி வரு கின்றனர். பிடிபட்ட வாலிபரின் நண்பர்களிடமும் விசாரிக்கின்றனர்.










