உள்ளூர் சந்தையில் சீராக இருக்கும் அரிசி விலை : தானியங்கள் விலை உயர்கிறது
Udumalai : வரத்து அதிகரித்ததால், உள்ளூர் சந்தையில் சில வாரங்களுக்கு முன் குறைந்த அரிசி விலை, நிலையாக உள்ளது. அறுவடை சீசனிலும் வரத்து இல்லாததால், தானியங் களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.உடுமலை பகுதிக்கு அரிசி ரகங்கள் கர்நாடகா, காரைக்குடி, காங்கயம் பகுதிகளில் இருந்து வரத்து உள்ளது.
டிசம்பரில் வெளிமாநில மற்றும் உள்ளூர் வரத்து குறைந்து அரிசி விலை வேகமாக உயர்ந்தது. நெல் சாகுபடியில் தை சீசன் அறுவடை துவங்கியதும், உள்ளூர் சந்தைக்கு வரத்து அதிகரித்து விலை குறைந்தது. கர்நாடகாவில் இருந்து ராஜபோகம், பி.பி.டி., ஆகிய ரகங்களும், அதிசய பொன்னி, ஏ.டி.டி., 36, வெள்ளை பொன்னி உட்பட ரகங்கள் காரைக்குடி, காங்கயம், ஆனைமலை பகுதிகளில் இருந்து விற்பனைக்காக வாங்கி வரப்படுகிறது.உள்ளூர் சந்தையில், கடந்த டிசம்பரில் 25 கிலோ மூட்டை ராஜபோகம் அரிசி 1,020 ரூபாய்க்கும், பி.பி.டி., 850 ரூபாய், அதிசய பொன்னி 550, வெள்ளை பொன்னி 1,040 ரூபாய்க்கும் விற் கப்பட்டது. வரத்து அதிகரித்ததும், அனைத்து ரக அரிசியின் விலையும் திடீரென குறைந்தது. 25 கிலோ மூட்டைக்கு 200 ரூபாயில் இருந்து 400 ரூபாய் வரை விலை சரிவு இருந்தது.
தற்போது, உள்ளூர் சந்தையில் 25 கிலோ மூட்டை ராஜபோகம் 820 ரூபாயாகவும், பி.பி.டி., 650., வெள்ளை பொன்னி 850 ரூபாயாகவும் குறைந்தது. அதிசய பொன்னியின் விலையும் 300 ரூபாய் வரை குறைந்துள்ளது.வெளிமாநில மற்றும் மாவட்ட வரத்து உடுமலைக்கு சீராகவே உள்ளது. இந்த விலை கடந்த சில வாரங்களாக எந்த மாற்றமும் இல்லாமல் நிலையாக உள்ளது. அடுத்த நான்கு மாதங்களுக்கு அரிசி விலையில் பெரிய மாற்றம் இருக்காது என சில்லறை வியாபாரிகள் தெரிவித்தனர்.தானியங்கள் விலை: தானியங்கள் விலை ஒரு மாதமாக நிலையில்லாமல் ஏற்ற இறக்கத்தில் உள்ளது. உடுமலை பகுதியில் தானியங்கள் சாகுபடியில் போதிய விளைச்சல் இல்லாததால் பெரும்பாலும் வெளிமாவட்டங் களில் இருந்தே வரத்து உள்ளது.
வறுகடலை கிலோ 46 ரூபாயில் இருந்து 50 ரூபாயாகவும், துவரம் பருப்பு 68 ரூபாயில் இருந்து 80க்கும், உளுத்தம்பருப்பு (பர்மா) கிலோவுக்கு 12 ரூபாய் உயர்ந்து 80 ரூபாய்க்கும், தட்டை பயறு-44 கொள்ளு-46 ரூபாயாகவும் விற்பனையாகிறது. இந்த பயறு ரகங்கள் அனைத்தும் சில மாதங்களாக தொடர்ந்து விலை அதிகரித்து வருகிறது.கொத்தமல்லி வரத்து குறைவாக உள்ளதால், ஒரே மாதத்தில் 14 ரூபாய் உயர்ந்து 64 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
வரமிளகு விலை 60 ரூபாயில் இருந்து 80 ரூபாயாக உயர்ந்துள்ளது. பாசிப்பயறு விலை மட்டும் சிறிது குறைந்து கிலோ 68 ரூபாய்க்கு விற்கப் படுகிறது. எண்ணெய் வகைகளின் விலையில், சில மாதங்களாக மாற்றம் இல்லை.சர்க்கரை விலை 41 ரூபாயில் இருந்து 35.50 ரூபாயாக குறைந்துள்ளது. தானிய சாகுபடி பரப்பு குறைந்துள்ளதால், அறுவடை சீசனிலும் விலை குறைவதில்லை என வியாபாரிகள் தெரிவித்தனர்.
Comments (5)











Many thanks for bothering to write this. I value where you are coming from on this write-up yet somehow I think there presently exist improved solutions.
I believe I first stumbled on your weblog via a link on Twitter.. I truly like the things I have read in your website and want to keep reading when I get more time. Do you have a Twitter account?
Amazing! Not clear for me, how often you updating your site?
Hi, i like your website, i am very, nice working blog. I will probably make a link from my blog.
Hello, I have browsed most of your posts. This page iswhere I got the most useful information for my information gathering. Thanks for posting, maybe we can see more on this. Are you aware of any other websites on this subject