மகா சிவராத்திரி விழா
Udumalai : உடுமலை சக்தி விநாயகர் கோவிலில், நாளை (மார்ச் 13) மகா சிவராத்திரி விழா நடக்கிறது. மாலை 6.00 மணிக்கு முதல் கால பூஜையும், இரவு 9.00 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், இரவு 12.00 மணிக்கு மூன்றாம் கால பூஜையும், இரவு 3.00 மணிக்கு நான்காம் கால பூஜையும் நடக்கிறது. நான்கு ஜாமத்தில், நான்கு வகை அபிஷேகம், அலங்காரம், நைவேத்தியம், தூபம், தீபம், பிரார்த்தனை நடக்கிறது.

maha shivaratri
மூன்றாவது ஜாமத்தில், அகிலாண்டீஸ்வரிக்கு அபிஷேகம், அலங்கார பூஜையும், சிவபெருமானுக்கு அணிவிக்கப்பட்ட நிர்மாலயங்களை சண்டிகேஸ்வரருக்கு சமர்பித்து சிவதரிசன பலனை பிரார்த்திக்கும் வழிபாடு உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்கிறது.










