மொபைல் போன் பயன்படுத்தும் தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர்

Tirupur : அரசு பஸ்களில் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் பணியில் இருக்கும் போது மொபைல் போன் பயன்படுத்த தடை விதித்துள்ளது. ஆனால்,  தனியார் பஸ்களில் இன்னும் இத்தடை நடைமுறைக்கு வராமல் உள்ளது. வாகனங்களை இயக்கும் போது, அதன் டிரைவர்கள் கவனத்துடன் வாகனங்களை இயக்க போக்குவரத்து துறை அறிவுறுத்தி வருகிறது.

வேகத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதோடு, எரிபொருள் (டீசல்) சிக்கனத்தையும் கண்டிப்பாக பின்பற்ற வலியுறுத்துகிறது. சமீபகாலமாக, பெரும் பாலான விபத்துகளுக்கு முக்கிய காரணமாக இருப்பது,  வாகனங்களை இயக்குவோர், மொபைல் போன்களில் பேசியபடி அலட்சியப் போக்குடன் வாகனங்களை ஓட்டுவது என தெரியவந்துள்ளது. அதேபோல், பஸ் ஸ்டாப்புகளில் பயணிகளை ஏற்றி இறக்கும் பொறுப்பில் உள்ள கண்டக்டர் களும் மொபைல் போன்களை பயன்படுத்தும் நேரங்களில், கவனக்குறைவாக செயல்பட்டால் விபத்துகளுக்கு வாய்ப்புள்ளது.  பஸ்களில் பயணிகள் அதிகமாக இருக்கும்போது, மொபைல் போனை பயன்படுத்தும் கண்டக்டர்களால் பலர் பயணச்சீட்டுகளை வாங்காமல் ஏமாற்றவும் வாய்ப்புள்ளது.
தற்போது அரசு பஸ்களில் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் மொபைல் போன்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு, நடைமுறையில் உள்ளது. இதுபற்றி கண்காணிக்க, போக்குவரத்து பரிசோதகர்களுக்கு உத்தரவிடப்பட்டு, விதி முறையை மீறுவோர் மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப் பட்டுள்ளது. இதனால், அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்கள் மொபைல் போன் பயன் படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். ஆனால், தனியார் பஸ்களில் இத்தடை நடை முறைக்கு வராமல் உள்ளது.

தனியார் பஸ்களை இயக்கும் பெரும்பாலான டிரைவர்கள், மொபைல் போன்களில் பேசியபடி பஸ்களை ஓட்டுகின்றனர். அவர்களது கவனக்குறைவால் விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.  இத்தடையை, தனியார் பஸ்களிலும் கண்டிப் பாக நடைமுறைப்படுத்த, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தனியார் வாகனங்களை இயக்குவோரும், இத்தடையை பின்பற்றும் முயற்சியை, அதிகாரிகள் எடுக்க வேண்டியது மிக அவசியம்.

Tags: , , , , , , , ,

Category: Tirupur News

Leave a Reply