நவீன ஆடுவதைக்கூடம் செயல்பாட்டுக்கு வந்தது

Tirupur : ”நவீன முறையில் அமைக்கப் பட்டுள்ள இறைச்சிக்கூடத்தை முறையாக பயன்படுத்தி, சுகா தாரத்தை பேணிக்காக்க வேண் டும்,” என கலெக்டர் சமயமூர்த்தி, மாநகராட்சி அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார். திருப்பூர் மாநகராட்சியில் 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சந்தைப்பேட்டை பகுதியில் நவீன ஆடுவதைக்கூடம் கட்டப்பட் டுள்ளது; இதை மேயர் செல்வராஜ் திறந்து வைத்தார்.

Mutton

Mutton

கலெக்டர் சமயமூர்த்தி, நவீன ஆடுவதை கூடத்தை பார்வையிட்டார். கமி ஷனர் ஜெயலட்சுமி, பொறியாளர் கவுதமன், இளம்பொறியாளர் கண்ணன், ஒப்பந்ததாரர் கனகராஜ் ஆகியோர் கட்டட அமைப்பு மற்றும் செயல்பாடுகளை விளக்கினர். கலெக்டர் சமயமூர்த்தி கூறுகையில், ”அதிநவீன இறைச்சிக் கூடத்தால், நகரப்பகுதியில் சுகா தாரம் பாதுகாக்கப்படும். தண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் தடைபடாமல் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மரக்கன்று களை வளர்த்து எழில் சேர்க்க வேண்டும்,” என அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

மாநகராட்சி கமிஷனர் ஜெயலட்சுமி கூறியதாவது: திருப்பூர் பகுதியில் மட்டும் 60 இறைச்சி கடைகள் இயங்கு கின்றன. ஞாயிறு, வெள்ளி மற்றும் வியாழக்கிழமைகளில் அதிக ஆடுகள் இறைச்சிக்காக பலியிடப் படுகின்றன. குறிப்பாக, ஞாயிற்றுக் கிழமைகளில், ஆயிரத்திற்கும் அதிகமான ஆடுகள் அறுக்கப் படுகின்றன. மாசு கட்டுப்பாடு வாரிய அனுமதியுடன் கட்டப்பட்டுள்ள இந்த இறைச்சி கூடத்துக்கு, ஐ.எஸ்.ஓ., தரச்சான்று பெறப் பட்டுள்ளது. அறுப்பதற்காக கொண்டு வரப்படும் ஆடுகள் ‘ப்ரி மார்ட்டம்’ அறையில் பாதுகாப் பாக அடைக்கப்படும்.

தினமும், கால்நடைத்துறை டாக்டர் ஆடுகளை சோதனை செய்து, நோய் தாக்கம் கண்டறியப்படும். அதன்பின், ‘ஸ்டன்னஸ்’ என்ற மயக்க நிலையை ஏற்படுத்தி, ஆடுகள் சத்தமின்றி அறுக்கப் படும். அறுபடும் ஆடுகள் பல கட்டங்களில் சுத்தப்படுத்தப் பட்டு, முறையான சீல் வைக்கப் பட்டு, விற்பனைக்கு கொடுக்கப் படும். இத்தகைய பணிகளுக்காக, ஒரு ஆட்டுக்கு 50 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சுத்தப்படுத்தப்படும் கழிவு நீரை சுத்திகரிப்பு செயற்வதற்காக, யு.ஏ.எஸ்.பி.ஆர்., சுத்திரிப்பு முறையில், 2,500 எம்.ஜி., கழிவுத் திறனை 250 எம்.ஜி.,யாக குறைக் கப்படும். பின், இறுதிகட்ட சுத்தி கரிப்பு செய்து, 25 எம்.ஜி., கழி வுடன் தண்ணீர் வெளியேற்றப் படும். சேகரிக்கப்படும் திடக் கழிவுகள் உரமாக மாற்றப்படும்.


வளாகத்தை தூய்மைப்படுத்து வதற்காக, சூரிய வெப்பத்தில் இயங்கும் ‘சோலார் வாட்டர் ஹீட்டர்’ பொறுத்தப்பட்டுள்ளது. வளாகம் முழுவதும் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படும். இறைச்சி கடைகளில் விற்கப்படும் ஆட்டுக் கறியில், மாநகராட்சி சீல் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், இறைச்சிக்கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, கமிஷனர் ஜெயலட்சுமி தெரிவித்தார்.

Tags: , , , , , , , ,

Category: Tirupur News, tiruppur, tirupur, tirupur details

Leave a Reply