தரம் குறைந்த ரேஷன் அரிசி வினியோகம்: மக்கள் புகார்

திருப்பூர் : “வீரபாண்டி ஊராட்சியில் திருக்குமரன் நகர் ரேஷன் கடையில், தரமான ரேஷன் அரிசி வழங்க வேண்டும்’ என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வீரபாண்டி திருக்குமரன் நகரில் உள்ள ரேஷன் கடையில் (எல்.பி.எப்., 93) ஆயிரத்துக்கும் அதிகமான கார்டுதாரர்கள் பொருட்கள் வாங்குகின்றனர்.

Ration-rice
கடந்த வாரத்தில் இருந்து வழங்கப்படும் ரேஷன் அரிசி மிகவும் தரம் குறைவாக இருப்பதாகவும், இதனால், நேற்று வாங்கிய ரேஷன் அரிசியை மூகாம்பிகை நகர் பகுதியில் ரோட்டோரமாக யாரோ கொட்டியிருந்தனர். திருக்குமரன் நகர் மக்கள் கூறுகையில்,”கடந்த ஒரு வாரமாக வழங்கப்படும் ரேஷன் அரிசி செம்பழுப்பு நிறமாக உள்ளது; மிகவும் துர்நாற்றம் வீசுகிறது. நீண்ட நாட்கள் கிடப்பில் இருந்த அரிசி விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் தலையிட்டு, தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’
என்றனர்.

நன்றி தினமலர்

Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

Category: Tirupur News, palladam, tiruppur, tirupur, tirupur details, tirupur district

Leave a Reply