விசைத்தறி தொழிலை காப்பாற்றுங்கள்: பல்லடத்தில் இருந்து ஒலிக்கிறது குரல்

Palladam : “விசைத்தறித் தொழிலை நசிவில் இருந்து காப்பாற்ற, ஆறு சதவீத வட்டியில் வங்கி கடனுதவி வழங்க வேண்டும்’ என, விசைத்தறியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பல்லடம், சோமனூர், தெக்கலூர், அவிநாசி உட்பட கோவை, திருப்பூர் மாவட்டத்தில் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள் வரை உள்ளன. ஒவ்வொரு தறியிலும் தினமும் சராசரியாக தலா 60 மீட்டர் துணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

நேர்முகமாகவும், மறைமுகமாகவும் இரண்டு லட்சம் பேர் வரை வேலைவாய்ப்பு பெறுகின்றனர். ஓராண்டுக்கு மேலாக, அடிக்கடி மின்தடை, தொழிலாளர் பற்றாக்குறை, நூல் விலை சீராக இன்மை போன்ற பல்வேறு இடர்களால் ஜவுளித் தொழில் கடும் நெருக்கடியில் உள்ளது. இத்தொழி லில் போட்ட முதலீட்டிற்கு ஏற்ப வருமானம் கிடைக்கவில்லை என்பதால், கோழிப் பண்ணை அமைத்தல், சிறிய அளவில் பைனான்ஸ் தொழில் செய்தல் போன்ற மாற்றுத் தொழிலுக்கு விசைத்தறி யாளர்கள் தாவி வருகின்றனர்.

விசைத்தறி தொழிலை நசிவில் இருந்து காப் பாற்ற, மின்வெட்டை முழுமையாக நீக்க வேண் டும்; நூல் விலையை குறிப்பிட்ட நாட்களுக்கு நிலையாக வைத்திருக்க வேண்டும்; துணி விற் பனைக்கு சந்தை ஏற்படுத்தி தர வேண்டும் என்பது விசைத்தறியாளர்களின் எதிர்பார்ப்பு. மேலும், ஆண்டுக்கு ஆறு சதவீத வட்டியில் வங்கி மூலம் கடன் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்பதே பெரும்பாலான விசைத்தறியாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள் கோரிக்கையாக உள்ளது.

Tags: , , , , , , , ,

Category: Tirupur News, palladam, tiruppur, tirupur, tirupur details

Leave a Reply