உழவர் சந்தை அமைக்க ஆய்வு

பல்லடம்: பல்லடம் வாரச்சந்தையில் காலியாக உள்ள இடத்தில் உழவர் சந்தை அமைக்க போதுமான இட வசதி உள்ளதா என கலெக்டர் சமயமூர்த்தி பார்வையிட்டார். பல்லடம் பஸ் ஸ்டாண்ட் பின்புறம் நகராட்சிக்குச் சொந்தமான வாரச்சந்தை உள்ளது. ஒன்றரை ஏக்கர் பரப்பளவு கொண்ட வாரச்சந்தை முன்புறம் கடைகள் கட்டப்பட்டுள்ளன. சில இடங்களில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
farmers-market

இவைபோக வெறும் 30 சென்ட் இடம் மட்டுமே காலியாக உள்ளது. காலியாக உள்ள இடத்தில் உழவர் சந்தை அமைக்க முடியுமா என கலெக்டர் சமயமூர்த்தி பார்வையிட்டார். பல்லடம் தாசில்தார் குலோத்துங்கன், செயல் அலுவலர் பெஞ்சமின் குணசிங், வேளாண் அதிகாரிகள் உடன் வந்திருந்தனர்.

நன்றி தினமலர்

Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

Category: Tirupur News, palladam, tiruppur, tirupur, tirupur details, tirupur district, tirupur exporter

Leave a Reply