அஞ்சலகத்தில் மின் கட்டணம் செலுத்த வசதி வருமா? : சென்னையை பின்பற்றுமா, திருப்பூர் தபால் துறை
அஞ்சலகத்தில் மின் கட்டணம் செலுத்தும் வசதி, சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது; இவ்வசதியை, நெரிசல் மிகுந்த திருப் பூரில் நடைமுறைப்படுத்த வேண் டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Current bill
தமிழகம் முழுவதும் இரண்டு கோடியே ஏழு லட்சம் மின் இணைப்புகள் உள்ளன. இந்த எண்ணிக்கை, கடந்த ஐந்து ஆண்டு களில் 22 சதவீதம் அதிகரித்து, 40 லட்சம் மின் நுகர்வோர் அதிகரித்துள் ளனர். குறைந்தபட்சம் மின் கட்ட ணம் செலுத்துவோர், 26.5 லட்சம் பேர். இவர்கள் மின் கட்ட ணத்தை செலுத்த ஏதுவாக, தமிழக அளவில் 2,264 மையங்கள் உள்ளன.
இம்மையங்களுக்குச் சென்று பணம் செலுத்துவதை தவிர்க்க, ஆன்லைன் முறை, வங்கிகளில் செலுத்துவது என புதிய முறைகள் உள்ளன. நுகர்வோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருப்பதால், மையங்களில் நெரிசல் குறைய வில்லை. தமிழக மின்வாரியத்தின் புதிய முயற்சியாக, அஞ்சலகங் களில் மின் கட்டணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள் ளது. தற்போது, சென்னையில் அறிமுகமாகியுள்ளது.
மின் கட்டணத்துடன் கூடுதலாக, அஞ்சலக சேவை கட்டணமாக ஐந்து ரூபாய் சேர்த்து செலுத்த வேண்டும். இத்திட்டம் வெற்றி பெற்றால், நான்கு மாதங்களில் தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம், நெரிசல் மிகுந்த திருப்பூர் நகருக்கு உகந்ததாகவே இருக்கும். திருப்பூரில் 1.75 லட்சம் பேர் மின் நுகர்வோர்களாக உள்ளனர். இவர்கள், மின் கட்டணத்தை 19 மையங்களில் செலுத்துகின் றனர். மின் கட்டண மையங்களையே அதிகமானோர் பயன்படுத்துவ தால், நெரிசல் அதிகமாக உள்ளது.
மின் கட்டணம் செலுத்த வேண்டிய மாதங்களில், மின்வாரிய வசூல் மையங்களுக்குச் சென்றால், நீண்ட வரிசை காணப்படுகிறது. கம்ப்யூட்டர் நெட்வொர்க் பழு தானால், பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவலமும் ஏற்படுகிறது.இப்பிரச்னைக்கு தீர்வு காண, சென்னையை போல் திருப்பூரிலும் அஞ்சலகங்களில் மின் கட்டணம் செலுத்தும் வசதி கொண்டு வரப் படுமா என்று திருப்பூர் அஞ்சலக கண்காணிப்பாளர் சம்பத்திடம் கேட்ட போது, “இத்திட்டம், சென்னை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றால், திருப்பூர் நகருக்குரிய முக்கியத்துவம் கருதி முன்னுரிமை அளிக்கப்படும். “மின் கட்டணம் செலுத்தும் மையங்களை விட, தபால் நிலையங்கள் அதிகளவில் இருக்கின்றன. மேலும், எந்தவொரு தபால் நிலை யத்திலும் செலுத்தலாம் என்பதால், மக்களுக்கு அதிக பயன் தரும்,” என்றார்.
மின் கட்டணம் செலுத்த வேண் டிய இறுதி நாட்களில் மக்கள் கூட்டம், மின்வாரிய மையங்களில் அலைமோதுகிறது. நெரிசல், காத்திருப்பு, காலதாமதம் என பல பிரச்னைகளை திருப்பூர் மக்கள் சந்திக்கின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண, அஞ்சலகத்தில் மின் கட்டணம் செலுத்தும் திட்டம் அவ சியம். சென்னையில் மக்களிடம் வரவேற்பு இருக்கிறதா, இல்லையா என ஆய்வு அறிக்கைக்காக காத்தி ருக்காமல், திருப்பூரில் ஏதேனும் ஒரு அஞ்சலகத்தில் பரிட்சார்த்த முறையில், நடைமுறைப்படுத்தி னால், அதன் தேவையை உணர்ந்து கொள்ளலாம்.










