பொன்னு மெட்ரிக் மாணவன் மாவட்ட அளவில் முதலிடம்
Dharapuram : தாராபுரம் பொன்னு மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவன் சதீஷ்குமார் திருப்பூர் கல்வி மாவட்டத்தில் முதலாவதாகவும், கணிப்பொறி அறிவியியல் பாடத்தில் மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். தாராபுரம் பொன்னு மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில், 99 மாணவ, மாணவியர் ப்ளஸ் 2 தேர்வு எழுதினர். அனைவரும் தேர்ச்சி பெற்றனர். திருப்பூர் கல்வி மாவட்டத்தில் தாராபுரத்தை சேர்ந்த மாணவன் சதீஷ்குமார் 1,176 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார்.
மாணவன் கவுரிசங்கர் 1,148 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும், மாணவன் சுதன் 1,145 மதிப்பெண் பெற்று மூன்றாமிடமும் வந்தனர். கணக்கு, இயற்பியல், வேதியியல், கணப்பொறி அறிவியல் ஆகிய பாடங்களில் சதீஷ்குமார் தலா 200 மதிப்பெண் பெற்றுள்ளார். தமிழ் 186, ஆங்கிலம் 190 மதிப்பெண் பெற்றார். மாணவன் கவுரிசங்கர் தமிழ் 182, ஆங்கிலம் 186, கணக்கு 195, இயற்பியல் 195, வேதியியல் 200, கணிப்பொறி அறிவியியல் 194 என மதிப்பெண் பெற்றுள்ளார்.
மாணவன் சுதன் தமிழ் 182, ஆங்கிலம் 185, கணக்கு 197, இயற்பியல் 197, வேதியியல் 199, கணிப்பொறி அறிவியல் 191 என மதிப்பெண் பெற்றார். தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை பள்ளி தலைமை ஆசிரியர் மணியரசன், தாளாளர் ஆறுச்சாமி மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினர்.
நன்றி தினமலர்










