கவுரவ விரிவுரையாளர் போராட்டம் தொடர்கிறது! மாணவர்கள் கல்வி கற்பதில் சிக்கல்
Tirupur : பணி நிரந்தரம் செய்யக் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு கல்லூரிகளில் பணி யாற்றும் கவுரவ விரிவுரை யாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின் றனர். மூன்றாவது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்தது; மாணவர்களின் கல்வி வெகுவாக பாதிக்கத் துவங்கியுள்ளது.
அரசு கலை கல்லூரிகளில் சுயநிதி பாடப்பிரிவாக இருந்து, அரசு பாடப்பிரிவாக மாற்றப்பட்ட வகுப்புகளுக்கு கவுரவ விரிவுரை யாளர்கள் நியமிக்கப்பட்டனர். நியமிக்கப்பட்ட 977 கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்வதாக, கடந்த தேர் தலின் போது, தி.மு.க., வாக்குறுதி அளித்தது. ஆட்சி பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் கடந்தும், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படாததால், கவுரவ விரிவுரையாளர்கள், பல் வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 8ம் தேதி முதல் உள்ளிருப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். மூன்றாம் நாளாக, நேற்றும் போராட்டம் தொடர்ந்தது. திருப்பூரில், சிக்கண்ணா மற் றும் எல்.ஆர்.ஜி., கல்லூரியைச் சேர்ந்த 37 கவுரவ விரிவுரை யாளர்கள் போராட்டத்தில் ஈடு பட்டுள்ளனர். போராட்டம் தொடர்வதால், மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.சிக்கண்ணா கல்லூரி முதல்வர் முகமதுகனி கூறுகையில்,”"கவுரவ விரிவுரையாளர்கள் நடத்திய வகுப்புகளுக்கு மாற்று விரிவுரை யாளர்கள் யாரும் செல்வதில்லை. 17ம் தேதி முதல் பாரதியார் பல்கலையின் செய்முறை தேர்வு கள் துவங்க உள்ளன. தற்போது, பாடங்கள் பாதியில் உள்ளதால் மாணவர்களின் வகுப்பு சிறிது பாதிக்கப்பட்டுள்ளது. “”மொத்தம் 17 பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நான்கு விரிவுரையாளர்கள், மாணவர்களின் நலன் கருதி நேற்று வகுப்புக்கு வந்து பாடம் நடத்தினர்,” என்றார்.
எல்.ஆர்.ஜி., கல்லூரி முதல்வர் அரசி கூறுகையில், “”மாணவியருக்கு “மாடல் எக்ஸாம்’ நடக்கிறது. இதனால், தற்போது பெரிய பாதிப்பு எதுவும் தெரியவில்லை. போராட்டம் தொடர்ந்தால், மற்ற விரிவுரையாளர்களால் பாடம் நடத்தப்படும்.
அரசுக்கு கல்லூரி சார்பில் எவ்வித பரிந்துரையும் அனுப்பவில்லை,” என்றனர். தமிழ்நாடு கவுரவ விரிவுரை யாளர் சங்க மாநில செயலாளர் சிவக்குமார் கூறியதாவது: திருப்பூர் எம்.எல்.ஏ., கோவிந்த சாமியை சந்தித்து கவுரவ விரிவுரை யாளர்களின் கோரிக்கைகள் தெரி விக்கப்பட்டது. அவர், உயர் கல்வித்துறை செயலாளரை தொடர்பு கொண்டார். கடந்த இரு மாதங்களாக கவுரவ விரிவுரை யாளர்களுக்கு வழங்கப்படாத ஊதியத்தை உடனடியாக வழங்க வும், கவுரவ விரிவுரையாளர்கள் பி.எச்.டி., படிக்க அனுமதி வழங்கவும் ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளார்.
இதற்கான அரசாணையை உயர் கல்வித்துறை வழங்க வேண்டும். பி.எச்.டி., படிக்க கல்லூரி சார்பில் தடையில்லா சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். 998 உதவி போராசிரியர்கள் பணியிடங் கள் உருவாக்கப்பட்டு, புதிதாக போராசிரியர்கள் நியமிக்கும் பணியை உயர் கல்வித்துறை ஏற் பாடு செய்து வருகிறது. பணி பாதுகாப்பு இல்லாத நிலை யில், பி.எச்.டி., படிக்க அனுமதி என் பது, காலம் கடந்து வழங்கப்படும் சலுகை. பணி பாதுகாப்பை உறுதி செய்தபின், இதுபோன்ற அறிவிப்பு வந்தால், இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கும், என்றார்.











