தெருநாய் தொல்லை பொதுமக்கள் அவதி
Tirupur: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாய் தொல்லையால், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.எஸ்.வி., காலனி, மேட்டுப்பாளையம், கொங்கு மெயின் ரோடு, எம்.எஸ்., நகர், கருவம்பாளையம், கே.வி.ஆர்., நகர், ராயபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் நாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்நாய்கள், ரோட்டில் செல்வோரை கடிப்பதுடன், இரவு நேரங்களில் டூவீலர்களில் வருவோரை துரத்துகின்றன. சில நேரங்களில், உயிரிழப்பை ஏற்படுத்தும் சில வாகன விபத்துகளுக்கு நாய்களே காரணமாகின்றன.

Street Dog
நாய்களால் ஏற்படும் பாதிப்பு தொடர்கிறது. இதேநேரத்தில், தெருநாய்களை கருணைக்கொலை செய்வதை, ‘ப்ளூ கிராஸ்’ மற்றும் ‘பீபிள்ஸ் பார் அனிமல்ஸ்’ போன்ற பிராணிகள் நல சங்கங்கள் கடுமையாக எதிர்க்கின்றன. இப்பிரச்னைக்கு முக்கிய தீர்வு காண, மாநகராட்சி நிர்வாகமும், பிராணிகள் நல சங்க நிர்வாகிகளும் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும்; தெருநாய்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்க முன்வர வேண்டும்.










