பாலாறு, நல்லாற்றில் மணல் கொள்ளை
Udumalai: பாலாறு மற்றும் நல்லாற்றில் தொடரும் மணல் கொள்ளையை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், பாறைகள் தெரியுமளவுக்கு மணல் சுரண்டப்பட்டுள் ளது. இதனால், ஆயிரக் கணக்கான ஏக்கர் தென்னை கருகும் அபாயம் உள்ளது.
உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பாலாறு, நல்லாறு உற்பத்தியாகி, தேவனூர்புதூர் கருப்பராயன் கோவில் அருகே இணைந்து, 20 கி.மீ., �ரம் பயணம் செய்து, அம்பராம்பாளையம் அருகே ஆழியாற்றில் கலக்கிறது. தேவனூர் புதூர், எரிசனம்பட்டி, ராவணாபுரம், ஆண்டியூர் கிராமங்களில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் வரையுள்ள பல ஆயிரம் ஏக்கர் விளைநிலத்தில் லட்சக்கணக்கான தென்னை மரங்கள் பயிரிடப் பட்டுள்ளன.பாம்பாறு மற்றும் நல்லாறு மூலம் நேரடி பாசனம் இல்லாத நிலையில், தேக்கங்கள், தடுப்பணைகள் மற்றும் மணல் படுகை காரணமாக ஆண்டு முழுவதும் நிலத்தடி நீர் மட்டம் சரியாமல் பாதுகாக்கப் பட்டு வந்தது. பருவமழை இல்லாத ஆண்டுகளில் கூட, இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் சரிந்ததில்லை. பல ஆயிரம் ஏக்கருக்கு நீராதாரமாக இருந்த பாலாறு மற்றும் நல்லாற் றில் சில மாதங்களாக நடக்கும் மணல் கொள்ளை அப்பகுதி நிலத்தடி நீர் மட்டத்தை அதல பாதாளத்திற்கு தள்ளி வருகிறது.
ஆறு முழுவதும் பாறைகள் தெரியுமளவிற்கு மணல் அள்ளப்பட்டுள்ளது. பல கிராமங்களின் வாழ்வாதாரமாக இருக் கும் இரண்டு ஆறுகளையும் காப்பாற்ற, மக்கள் பல முறை புகார் மனு அளித்தும் வருவாய்த் துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால், நிலத்தடி நீர் மட்டம் வேகமாக குறைந்து, அப்பகுதியிலுள்ள கிணறுகள், போர்வெல்கள் மற்றும் கிராமங்களுக்கு குடிநீர் அளிக்கும் கூட்டுக்குடிநீர் திட்ட உறிஞ்சு கிணறுகள் வேகமாக வறண்டு வருகின்றன.
பருவமழை பெய்தாலும், பாறைகளாக காணப்படும் ஆற்றில் தண்ணீர் தேங்காது. மணல் கொள்ளையால் ஆற்றின் வழித்தடம் மாறி விளைநிலங்கள் சேதமடையும் அவல நிலை உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இந்நிலையில், விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ள மனு: தேவனூர்புதூர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான விவசாய குடும்பங்களுக்கு ஆதாரமாக இருக்கும் பாலாறு, நல்லாறு அதிகாரிகளின் மெத்தனத்தால் காணாமல் போய் வருகிறது.
பல மாதங்களாக ஆற்றில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ளி, ஓரிடத்தில் குவித்து வைத்து விற்பனை செய்து வருகின்றனர். பகலிலும் திருட்டு நடக்கிறது. கிராம நிர்வாக அலுவலர், தாசில்தார் உட்பட அனைத்து அதிகாரி களிடமும் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், நிலத்தடி நீர் மட்டம் இப்பகுதியில் வேகமாக குறைந்து வருகிறது. பழைய நிலையில் ஆற்றில் மணல் படுகைகள் ஏற்பட பல ஆண்டுகளாகும். மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள், அவர்களுக்கு உறு துணையாக இருக்கும் அரசியல்வாதிகள் என அனைவருமே எதிர்காலத்தில் குடிநீர் மற்றும் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் அலைய வேண்டும் என்பதை உணர வேண்டும். இவ்வாறு, அம் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.











