தூசு கலந்த உணவு வழங்கியதால் மாணவர்கள் ஆவேசம் : திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி விடுதியில் பரபரப்பு

Tirupur : திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரியில் படிக்கும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான விடுதியில் நேற்று வழங்கிய உணவு, தூசு கலந்து சுகாதாரமற்று இருந்ததால், மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்; போலீசார் மற்றும் அதிகாரிகள் சமரசம் செய்தனர். “மாணவர்களின் பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு ஏற்படுத்தா விட்டால், ஆதிதிராவிடர் நலத்துறையை கண்டித்து மறியல் போராட்டம் நடத்தப்படும்’ என, எச்சரிக்கப் பட்டுள்ளது.

tirupurnews-collage

tirupurnews-collage

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான விடுதி உள்ளது; இரண்டு தளங்கள் உள்ளன; 150 மாணவர் கள் தங்கி படிப்பதற்கான வசதி உள்ளது. கட்டடம் பராமரிப்பு இல்லாமல் இருப்ப தால், தரைத்தளத்தில் உள்ள அறைகளில் மட்டும் 55 மாணவர்கள் தங்கி படிக் கின்றனர். இதேபோல், சமையலறை, கழிப் பறையும் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. விடுதியின் நிலை குறித்தும், அதை சரி செய்யக்கோரியும் மாணவர்கள் தரப்பில் இருந்து ஆதிதிராவிட நலத்துறையிடம் பலமுறை புகார் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், விடுதி வசதிகளை மேம் படுத்த எவ்வித நடவடிக்கையும் மேற் கொள்ளப்பட வில்லை. இரண்டு வாரங் களுக்கு முன், கலெக்டர் சமயமூர்த்தி விடுதியை ஆய்வு செய்தார். அப்போது, உரிய வசதிகளை ஏற்படுத்தி தருவதாக உறுதி அளிக்கப்பட்டது, ஆனால், எவ்வித வசதியும் மேம்படுத் தப்படவில்லை. கடந்த ஒரு வாரமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால், மக்கள் குறைதீர்ப்பு முகாமிற்கு மாணவர்கள் வந்து, கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர். உடனடி யாக, மாநகராட்சி லாரி மூலம் குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில், தூசு மற்றும் கறுப்பு நிற துகள்களுடன் கூடிய சுகாதாரமற்ற உணவு நேற்று காலை வழங்கப்பட்டதாக, கல் லூரி முதல்வர் முகமதுகனியிடம் மாண வர்கள் புகார் அளித்தனர். பின், மறியல் போராட்டத்தில் ஈடுபட முற்பட்டனர். ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் மாணவர்களிடம் பேச்சு நடத்தி, குறைகளை சரி செய்வதாக தெரிவித்தனர். விடுதி மாணவர்கள் கூறியதாவது:இப்பிரச்னைகள் பல ஆண்டுகளாக தொடர்கின்றன. விடுதி பராமரிப்புக்காக நிதி ஒதுக்கப்பட்டாலும், எவ்வித வசதியையும் அதிகாரிகள் செய்து தரு வதில்லை.

விடுதியில் வார்டன் கூட இல்லை. கலெக்டரிடம் புகார் தெரிவித் ததை தொடர்ந்து, பாலகிருஷ்ணன் என் பவர் பொறுப்பு வார்டனாக நேற்று நியமிக்கப்பட்டார்.குடிநீர், கழிப்பிடம் என பல்வேறு பிரச்னைகள் உள்ளன. நேற்று வழங்கப் பட்ட உணவு தூசு கலந்து, சுகாதாரமற்ற நிலையில் இருந்தது. எனவே தான் போராட்டத்தில் ஈடுபட முயற்சித்தோம். இம்முறையாவது, இதற்கான தீர்வை அதிகாரிகள் ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு, விடுதி மாணவர்கள் கூறினர்.

ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் செல்வராஜ் கூறுகையில், “”விடுதி மாணவர் களுக்கு தேவையான வசதிகளை செய்து தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விடுதி யில், தண்ணீர் பற்றாக்குறையாக இருந்த தால், மாநகராட்சி மூலம் குடிநீர் வழங்கப் பட்டு வருகிறது. குடிநீரை, பாத்ரூம் தேவை களுக்கும் மாணவர்கள் பயன்படுத்துவ தால் பற்றாக்குறை ஏற்படுகிறது. சாப்பாடு பிரச்னையை சரி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,” என்றார்.”மாணவர்களின் பிரச்னைகளுக்கு உட னடியாக தீர்வு ஏற்படுத்தாவிட்டால், ஆதி திராவிடர் நலத்துறையை கண்டித்து மறி யல் போராட்டம் நடத்தப்படும்’ என, இந் திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செய லாளர் முத்துகண்ணன் எச்சரித்துள்ளார்.

Tags: , , , , , , ,

Category: Tirupur News, tiruppur, tirupur, tirupur details

Leave a Reply