உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா மார்ச் 16ல் துவக்கம்

Udumalai : உடுமலை மாரியம்மன் கோவிலில், தேர்த்திருவிழா மார்ச் 16ம் தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. உடுமலை மாரியம்மன் கோவில், தேர்த்திருவிழா ஆண்டுதோறும் மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, தேர்த்திருவிழா மார்ச் 16ம் தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. மார்ச் 23ம் தேதி இரவு 7.00 மணிக்கு கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சியும், 25ம் தேதி இரவு 12.00 மணிக்கு வாஸ்துசாந்தி, கிராம சாந்தி பூஜையும் நடக்கிறது.

மார்ச் 26ம் தேதி பகல் 12.30 மணிக்கு கொடியேற்றம், பகல் 2.00 மணிக்கு பூவோடு துவக்க நிகழ்ச்சியும் நடக்கிறது. மார்ச் 30ம் தேதி இரவு 10.00 மணியுடன் பூவோடு நிறைவு; மார்ச் 31ம் தேதி அதிகாலை 4.00 மணிக்கு மாவிளக்கு பூஜையும், மாலை 4.00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. ஏப்.,1ம் தேதி காலை 6.45 மணிக்கு அம்மன் தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், மாலை 4.00 மணிக்கு தேரோட்ட நிகழ்ச்சியும் நடக்கிறது.

தொடர்ந்து 2ம் தேதி இரவு 8.00 மணிக்கு பரிவேட்டையும், இரவு 11.00 மணிக்கு வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடக்கிறது. பின்,ஏப்.,3ம் தேதி காலை 7.30 மணிக்கு மஞ்சள் நீராட்டம், காலை 8.15 மணிக்கு கொடியிறக்கமும், பகல் 11.00 மணிக்கு மகாபிஷேகமும் நடக்கிறது. மேலும், மார்ச் 26ம் தேதி முதல் தினசரி இரவு 7.30 மணிக்கு அம்மன் புஷ்ப அலங்காரத்தில் வீதி உலா செல்லும் நிகழ்ச்சியும், மார்ச் 27ம் தேதி முதல் கோவில் மற்றும் குட்டைத்திடலில் கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகள் குறித்து கடந்த மாதம் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு, அதன்படி, நிகழ்ச்சிகள் மேற்கொள்ளவும், விழாவிற்கு தேவையான ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: , , , , , , , ,

Category: Tirupur News, Udumalpet, Udumalpet news, tiruppur, tirupur, tirupur details

Comments (1)

 

  1. How often do you write your blogs? I enjoy them a lot 2 6 4

Leave a Reply