காய்ந்த உப்பாறு ஓடையில் நீர் திறப்பால் மகிழ்ச்சி!… நிரம்பி பெருக்கெடுத்தது வெள்ளம்

Udumalai: பல ஆண்டுகளுக்கு பிறகு உப்பாறு ஓடையில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் வழியோர கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஓடை தண்ணீர் ரோட்டில் பெருக்கெடுத்ததால் சில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தாராபுரம் பகுதியிலுள்ள உப்பாறு அணைக்கு நீர் வரத்தாக உள்ள ஓடைகள் அனைத்தும் குடிமங்கலம் ஒன்றிய பகுதியில் உள் ளன.

upparu-riverமழைக்காலங்களில் மட்டும் இந்த ஓடைகளில் தண்ணீர் செல்லும். பி.ஏ.பி., பிரதான கால்வாயிலிருந்து உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விட பாசன சங்க நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் பல ஆண்டுகளாக ஓடையில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை.போதிய மழை இல்லாத நிலையில் ஓடையிலும் தண்ணீர் செல்லாததால் வழியோர கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிக்கப்பட்டது.

கிராம உள்ளூர் நீராதாரங்கள் வறண்ட நிலையில் இப்பகுதியில் தென்னை மற்றும் இதர சாகுபடிகள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், நேற்று முன்தினம் திருமூர்த்தி அணையிலிருந்து உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்கப் பட்டது. பிரதான கால்வாய் வழியாக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு, கால்வாயின் 46வது கிலோ மீட்டரில் அமைந்துள்ள அரசூர் ஷெட்டர் வழியாக உப்பாறு ஓடைக்கு தண்ணீர் திருப்பிவிடப்பட்டது.இதனையடுத்து வறண்டு கிடந்த உப்பாறு ஓடையில் பல ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.


குடிமங்கலம் ஒன்றிய பகுதியில் ஓடையின் குறுக்கே நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்க கட்டப் பட்டிருந்த தடுப்பணைகள் சில மணி நேரங்களில் நிரம்பி தண்ணீர் வெளியேறியது. வறண்டு கிடந்த அரசூர் குளம் நேற்று நிரம்பியது. அருகிலுள்ள மொகவனூர், அரசூர் கிராமங்களுக்கு செல்லும் இணைப்பு ரோட்டிலுள்ள பாலம் உடைந்ததால் கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

சிந்திலுப்பு பகுதியில் செஞ் சேரிமலை ரோடு பாலம் பகுதியில் குழாய் அடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் முழுவதும் ரோட்டில் வெள்ளமாக சென்றது. இதனால், பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அம்மாபட்டியிலிருந்து ஆமந்தகடவு செல்லும் ரோட்டிலுள்ள தரைமட்ட பாலத்தில் தண்ணீர் அதிகளவு சென்றதால் போக்குவரத்து சில மணி நேரம் துண்டிக்கப் பட்டது.

பல ஆண்டுகளுக்கு பிறகு உப்பாறு ஓடையில் தண்ணீர் செல்வதை வழியோர மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். தொடர்ந்து ஏழு நாட்கள் தண்ணீர் செல்ல உள்ள நிலையில் கிராம மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஓடையின் வழியோரத்திலுள்ள வாகத் தொழுவு, கொசவம்பாளையம், அனிக்கடவு, ஆமந்தகடவு, பெரியபட்டி, பூளவாடி, மூங்கில் தொழுவு உட்பட பல ஊராட்சிகளின் உள்ளூர் நீராதாரங்கள் மீண் டும் பழைய நிலையில் செயல்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தடுப்பணைகள் நிரம்பியுள்ளதால் நிலத் தடி நீர் மட்டம் அதிகரித்து பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும் பயன்பெறும் நிலை உள்ளது.தண்ணீர் திருட்டு “ஜோர்’: உப்பாறு அணைக்கு செல்லும் ஓடை காட்டாறு போல காணப்படுவதால் வழியோரங்களில் தண்ணீர் திருட்டு தீவிரமாக நடக் கிறது. தண்ணீர் திறந்து விடப் பட்டதும் மோட்டார்கள் மூலமாகவும், சிறிய அளவில் கால்வாய் அமைத்து தண்ணீர் திருடுவதும் துவங்கியது. அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் திருட்டு தீவிரமடைந்துள்ளது. இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. மேலும், ஓடை குறுக்கிடும் பகுதிகளில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ரோடுகளில் பெருக்கெடுத்து ஓடியது.

நன்றி தினமலர்

Tags: , , , , , , , ,

Category: Tirupur News, Udumalpet, Udumalpet news, tiruppur, tirupur, tirupur details, tirupur district

Leave a Reply