வெளிமாநிலங்களில் கால்பதிப்பு : நெருக்கடியில் பனியன் உற்பத்தி : திருப்பூரில் சார்பு தொழில்களுக்கு ஆபத்து?
Tirupur :
வேறு மாவட்டத்துக்கு செல்லும் சாயப்பணி: திருப்பூரில் பெரும்பாலான சாய ஆலைகள் இயங்காததால், இங்குள்ள உற்பத்தியாளர்கள், கரூர், ஈரோடு, பெருந்துறை பகுதி சாய ஆலைகளுக்கு ஆர்டர் கொடுக்கின்றனர். ஆர்டர்களை குறித்த தேதியில் அனுப்ப முடியாமல், உற்பத்தி செய்ய காலதாமதம் ஏற்படும் போது, கூடுதல் செலவு செய்து விமான போக்குவரத்தில் அனுப்பி வைக்க வேண்டியிருக்கும். எனவே, திருப்பூரை காட்டிலும் கிலோவுக்கு 10ல் இருந்து 15 ரூபாய் வரை, கூடுதல் செலவு ஏற்பட்டாலும், சாயமிடுவதற்காக வேறு மாவட்டங்களுக்குச் செல்கின்றனர்.










