‘குறை இருந்தால் கவனத்துக்கு கொண்டு வாருங்கள்’
Tirupur : “அரசு திட்டங்கள் மக்களைச் சென்றடைவதில் குறையிருப்பின், கவனத்துக்கு கொண்டு வாருங் கள்; உடனடியாக சரி செய்யப்படும்,” என மகளிர் தின விழாவில், அமைச்சர் சாமிநாதன் பேசினார்.
திருப்பூர் மாவட்ட சமூக நலத்துறை சார்பில், உலக மகளிர் தின விழா, நலத்திட்ட உதவிகள் வழங் கும் விழா, திருப்பூரில் நேற்று நடந்தது. கலெக்டர் சமயமூர்த்தி தலைமை வகித்துப் பேசுகையில், “”பெண்கள் சமுதாயம் உயர்ந்தால், நாடும் உலகும் உயரும். அதற்காக, பெண் கல்வி யில் அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. பெண் குழந்தை திட்டம் மூலம் பள்ளி குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்குகிறது.
உயர்கல்வி உதவித் தொகை, திருமண செலவுக்கு உதவித்தொகை, தனி நபர் பொருளாதம் உயர சமூக நலம், ஆதி திராவிடர் நலம், பிற்பட்டோர் மற் றும் மிகவும் பிற்பட்டோர் நலத்துறை மூலம் பல் வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
இந்தியா வலிமையுள்ள நாடாக மாற, மகளிர் சமுதாயம் முன்னேற பாடு படுவோம்,” என்றார். மொத்தம் 716 பயனாளி களுக்கு மூவலூர் ராமா மிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டத்தில் ஒரு கோடியே 43 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள உதவித்தொகை வழங்கப் பட்டது. இலங்கை தமிழர் சிறப்பு திட்டத்தில், இரண்டு இலங்கை தமிழ் பயனாளிகளுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்பட்டது.
நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது: தமிழக அரசு மகளிருக் காக சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெரும்பாலான நலத்திட்ட உதவிகள் மகளிரை முன் னிறுத்தியே மேற்கொள் ளப்படுகின்றன. இலவச காஸ், பட்டா என அனைத்துமே பெண் பய னாளிகளின் பெயரில் மட்டும் வழங்கப்படு கிறது. பிற்படுத்தப்பட் டோர், மிகவும் பிற்படுத் தப்பட்ட இனத்தில், முதல் பட்டதாரி எனில், கல்லூரி கல்வி இலவசமாக வழங்கப்படுகிறது.
அரசின் திட்டங்களை, அமைச்சர்கள், மக்கள் பிரதி நிதிகள் மட்டும் மக்களிடம் கொண்டு சேர்த்து விட முடியாது. அதிகாரிகளும், பொதுமக்களும் ஒத் துழைக்க வேண்டும். திட் டங்களை முழுமையாக செயல்படுத்துவதிலும், அனைத்து பய னாளி களுக்கும் கொண்டு சேர்ப் பதிலும் எங்களையும் அறியாமல் சிறு, சிறு குறைகள் இருக்கலாம். அவற்றை அரசின் கவனத்துக்கும், மாவட்ட நிர்வாகத்தின் கவனத் துக்கும் கொண்டு வந்தால், உடனடியாக சரி செய்வோம். இவ்வாறு, அமைச்சர் சாமிநாதன் பேசினார்.
எம்.எல்.ஏ., கோவிந்த சாமி, நல்லூர் நகராட்சி தலைவி விஜயலட்சுமி, மாவட்ட சமூகநல அலு வலர் ஷெரீன்பிலிப், திட்ட அலுவலர் ரேணுகாதேவி, பொது சுகாதார துணை இயக்குனர் விஜயலட்சமி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஜோதிமணி உட்பட பலர் பங்கேற்றனர்.
யோசித்திருக்கலாமே! : சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டியே, சமூகநலத்துறை சார்பில் நலத்திட்ட உதவி கள் வழங்கப்பட்டன. பெண்களுக்கான நலத் திட்ட உதவி வழங்க, 716 பயனாளிகள் தேர்வு செய்யப் பட்டிருந்தனர். அனைத்து பயனாளி களுக்குமே, கலெக் டரும், அமைச்சரும் நேரடியாக நலத்திட்ட உதவி வழங்கினர். ஆனால், மொத்த பயனாளிகளில் ஐந்து சதவீதத்தினர் கூட பெண்கள் இல்லை.
716 பயனாளிகளில் அதிகபட்சமாக 35 பேர் மட்டுமே பெண் பய னாளிகள். நடந்ததோ மகளிர் தின விழா. வழங்கப்பட்டதோ, பெண்களுக்கான நலத் திட்ட உதவி. பெற்றுச் சென்ற பயனாளி களோ ஆண்கள். திரு மணம் செய்து கொடுக் கப்பட்ட பெண்கள் என்பதால், அவர் களின் தந்தையிடம் வழங்கப்பட்டது. மகளிர் தினம் என்ப தால், பயனாளிகளின் தாயிடம் கொடுத் திருக்கலாமே!










